Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

17 December, 2012

மனைவியை பக்கத்தில வைச்சுக்கிட்டு படிக்காதீங்க!


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
                    பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!


                                              

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
                     கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????





மனைவி :- கருமம்... கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட
                       கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா!  இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?





பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
              நான் பங்கெடுத்துகுவேன!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!





கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி
                     சொல்றீங்க..!



மீண்டும் சந்திப்போம் ....




06 August, 2012

சிரிக்க மட்டும்

a

பீலு     :   எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் தெரியுமா? டைனோசரையெல்லாம் 
                 சுட்டுத் தள்ளியிருக்காரு.

வாலு :   என்னடா சொல்ற, இப்பத்தான் டைனோசரே இல்லையே!

பீலு     :   அதான் சொன்னேனே, 
                 எங்கப்பா டைனோசரையெல்லாம் சுட்டுட்டாருன்னு.








லவ்வர் கேர்ள்  :   நேத்து நம்ம காதலை மெதுவா                                       எங்க   வீட்டுல சொல்லிட்டேன்.


லவ்வர் பாய்      :  அப்படியா, என்ன சொன்னாங்க?


லவ்வர் கேர்ள்   :  மெதுவா சொன்னதால யாருக்கும்
                                    கேட்கல.  







                                                                                                                                                               

மனைவி       :  என்னை  நேத்து தூக்கத்தில கண்டபடி திட்டிக்கிட்டு இருந்தீங்க?


கணவன்       :   யார் சொன்னா, நான் தூக்கத்தில இருந்தேன்னு!

                                                                                                                                                               





ஆ..பிசர்                 :   நீங்க தான தமிழ்செல்வன்?

தமிழ்செல்வன்   :   ஆமாங்க.

ஆ..பிசர்                  :  உங்க பேர்ல கணக்கு இருக்கா?

தமிழ்செல்வன்    :   இல்லேங்க! , என் பேர்ல தமிழ் தான்
                                      இருக்கு.






நல்லவர்                 :   உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  
                                        பிடிக்கிறானே?

வல்லவர்                :   உளராதீங்க!, அவனுக்கு முன்னாடியே நான் பிடிக்க 
                                        ஆரம்பிச்சிடேன்.
                                        (cigaratte smoking is injurious to health)
                                        (( ஜோக்கா இருந்தாலும் ரூல்ஸை Follow பண்ணுவோம்ல))





24 January, 2012

Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்

நெட் கனெக்சன் இல்லாமல் இயங்கும் வெப்சைட் பார்த்திருக்கிறீர்களா?. ரஜினியின் பவரால் இயங்கும் தளம் இது என புல்லரிக்க வைக்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளம் Offline ல் மட்டுமே வேலை செய்யும்படி உருவாக்கியுள்ளார்கள்.ரஜினியின் பெயரைச் சொல்லி ரவுண்டு கட்டி வரும் காமெடிகள் வடக்கில் அதிகம். அட! இது நமக்கு தோணாம போச்சே? என்று S.P.முத்துராமனும்,K.S ரவிக்குமாரும் மிரளும் படி சில காமெடிகளும் உள்ளது. 



சாம்பிளுக்கு சில :

ரஜினி ஒரு தடவை குதிரையின் கழுத்தில் ஒரு குத்து விட்டார். பின்னாளில் அதன் சந்ததி தான் ஒட்டகச்சிவிங்கி ஆனது.

இண்டெலின் புதிய விளம்பரம்  . 'Rajnikanth Inside'

ரஜினி 100 மீட்டர் ரேசில் முதலாவதாக வந்தார். பார்த்த Einstein பட்டுனு போயிட்டார். காரணம் லைட் இரண்டாவதாக வந்தது.

ரஜினி Titanic படத்தில் நடித்திருந்தால் Climaxல் ஒரு கையில் ஹீரோயினையும், மறு கையில் டைட்டானிக் கப்பலையும் பிடித்துக் கொண்டு நீந்தியே கரையேறி இருப்பார்.

Nokia அடுத்து 'R' (Rajnikanth) series போனை வெளியிடுகிறது.
Features:
1 Year Battery Backup
20 Sims
1000 Megapixel Camera
TV
Washing Machine
Fridge
Micro Oven
Rocket Launcher
AK 47

சாம்பிளுக்கு ஒரு படம்




சாம்பிளுக்கு ஒரு வீடியோ





இப்பொழுது Latest ஆக ரஜினியின் பவரில் இயங்கும் இணையதளம்.





இந்த தளத்திற்கு சென்றவுடன் இணைய இணைப்பை துண்டிக்க சொல்கிறார்கள். அதன்பின் தான் உள்ளேயே செல்கிறது. நன்றாகவே இருக்கிறது. சின்ன சின்ன விபரங்களுடன் Flashல் கொடுத்துள்ளார்கள்.எல்லாம் HTML கைங்கர்யம் தான், ஆனால் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள். நாங்கெல்லாம் தீவிர ரஜினி ரசிகர்களப்பா! நீங்க என்ன காமெடி பண்ணினாலும் அதையும் ரசிச்சு பார்ப்போம்.(எவ்வளவோ பாத்துட்டோம், இத பார்க்க மாட்டோமா?)

பாராட்டியோ,திட்டியோ,நக்கலடித்தோ பல பேர் அவரால் பலனடைந்து கொண்டிருக்கிறார்கள்.  அது தான் ரஜினியின் பவர்.



மீண்டும் சந்திப்போம்.




15 December, 2011

படமும் செய்தியும்

                                   செம கொத்து படமாக வெளிவந்த 'தீபாவளி' படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான 'போகாதே,போகாதே' பாடலில் லாஜிக்கே இல்லாமல் ஒரு காட்சி வரும். ( ஒரு காட்சி மட்டுமா?).  பெட்ரோல் பங்கில் பாவனா, கூட வந்தவரை விட்டுவிட்டு ஜெயம் ரவியுடன் (ஹெல்மேட் போட்டிருப்பதால்) போவது போல் காட்சி வரும். இது படம்.




                                                      நெல்லையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் இரவு நேரத்தில் பெட்ரோல் போட வந்த இரண்டு வெவ்வேறு தம்பதிகள் கரண்ட் கட் மற்றும் ஒரே பைக், ஒரே ஹெல்மேட் போன்ற காரணத்தால் (நெல்லையில் ஹெல்மேட் போடவில்லை என்றால் பிடிக்கிறார்களா?) ஒரு பெண் மற்றொருவர் பைக்கில் ஏறி போய் விட்டாராம். கணவன் மனைவியை காணவில்லையே என செல்லில் அழைக்க, பிறகு விஷயம் தெரிந்து  அவரவர்கள், அவரவர்களுடன் வீட்டிற்கு போய் இருக்கிறார்கள். என்னத்த சொல்ல, பைக், ஹெல்மேட் எல்லாம் அடையாளம் பார்த்து வைச்சவங்க கொஞ்சம் புருஷனையும் அடையாளம் பார்த்து வைச்சிருக்க்லாம்.  இது செய்தி.




                                           நான் ஒரு நாள் ஒரு கடையில் பர்சேஸ் செய்து கொண்டிருக்கும் போது இப்படித்தான் கொஞ்சம் வயதான தம்பதி பர்சேஸ் செய்து விட்டு கிளம்பும் போது அவரு வாங்கின பொருட்களையெல்லாம் Activa வில் முன்னாடி வைத்து விட்டு 'சரி ஏறு' என்று வண்டியை ஸ்டார்ட் செய்து பேசிக்கொண்டே கிளம்பி விட்டார். இந்தம்மா 'என்னங்க, என்னங்க' என்று சன்னமாய் இரண்டு தடவை கூப்பிட்டு விட்டு பேசாமல் நின்று விட்டார். நான் என்னம்மா? செல்லில் வேணும்னா கூப்பிடுங்க! என்றேன். அதற்கு அந்த அம்மா ரொம்ப கூலாய், அதெல்லாம் வேண்டாம். வீட்டிற்கு போன பிறகு, பின்னாடி நான் இல்லேன்னு தெரிஞ்சவுடன் திரும்பி வந்து கூட்டிக்கொண்டு போய் விடுவார் என்றார். (ரெகுலர் போல) நான் ஷாக்காயிட்டேன். என்னடாது ! , வீட்டிற்கு போய் தான் பார்ப்பாரா?  பேசிக்கிட்டே போற மனுசன் பின்னாடி பதில் வரலேயேன்னு திரும்பி பார்க்க மாட்டாரான்னா? , அந்தம்மா 'நான் எங்க பேசறது, கல்யாணம் ஆனதில இருந்து அவர் தான் பேசிக்கிட்டே இருக்காருங்கறாங்க.  வாயே திறக்காத மனைவின்னா யார் தான் திரும்பி வந்து கூட்டிட்டு போகாம இருப்பாங்க.  அதெல்லாம் கொடுப்பினை சார்.


மீண்டும் சந்திப்போம்.


12 November, 2011

தோள் கெடுப்பான் தோழன்

                                                                      உலகத்திலேயே ரொம்ப கொடுத்து வைத்த ஆத்மாக்கள் யார் தெரியுமா? எந்த இடமா இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் சும்மா படுத்தவுடன் DTS Effect உடன் தூங்கி விடும் நபர்கள் தான். எப்படித்தான் முடியுதோ?   

                                       "SSssssssssssssssssssssssssssssssssssssss"

வேறென்ன பெருமூச்சு தான். ஆனா அதையும் தாண்டி சில பேர் இருக்காங்கநாம் அடிக்கடி பார்க்ககூடிய நபர்கள் தான். பஸ்ல ஏறி உட்கார்ந்தவுடன் தூங்கறவங்கள பத்தி தான் சொல்றேன்.






                                                                                      அதுல பாருங்க! மனைவியிடம் மிதிபடுவோர் சங்கம், அசராமல் அடி வாங்குவோர் சங்கம்  மாதிரி  Bus Sleepers அப்படின்னு ஒரு சங்கம் இருக்குன்னு நினைக்கிறேன்.  அவங்களோட முதல் பரிட்சையே பக்கத்துல  உட்கார்ந்து இருக்கிறவங்கள தேர்ந்தெடுக்கிறது தான். ரொம்ப குண்டாகவும் இருக்கக்கூடாது (இடைஞ்சலா இருக்கும்ல) ரொம்ப ஒல்லியாகவும் இருக்கக்கூடாது ( எலும்பு குத்தும் இல்ல), அடுத்து முக்கியமா மேலே படுத்து புரண்டாலும் முறைக்காத ஆளா இருக்கனும்.  பஸ்ல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இந்த ரெண்டு பரிட்சையிலும் பாஸ் ஆகிற முதல் ஆள் நானா தான் இருப்பேன். சங்கத்து ஆளுங்க பஸ்ல ஏறியவுடன் சீட் காலியா இருக்கானு கூட முதல்ல பார்க்க மாட்டாங்க, என்னை மாதிரி ஆள தான்  தேடுவாங்க. சிக்கிட்டோம் அவ்வளவு தான். நாலு சீட்டை தாண்டி குதிச்சு, பத்து பேரை ஏறி மிதிச்சி நம்ம பக்கத்து சீட்டை பிடிச்சிருவாங்க.

                                          உட்கார்ந்ததும் அவங்க வேலைய ஆரம்பிச்சிருவாங்க. அதுக்கப்புறம் நாம தான் கண்டக்டர் வரவும் அவங்கள எழுப்பி டிக்கட் எடுக்க வைச்சு, ஸ்டாப் வரவும் எழுப்பி இறக்கி விட்டு வரணும். நல்ல எண்ணெய் தலையோட பார்ட்டி எறிச்சு நம்ம சட்டை அம்பேல் தான். நமக்கு பஸ்ல ஏறினவுடன் பராக்கு பார்த்தே பழகிப்போச்சு. அதனால என்னா முட்டி மோதினாலும் தூக்கமும் வராது. நானும் ரொம்ப நாளா கவனிச்சி பார்க்கிறேன். அடுத்த சீட்ல உட்காந்திருக்கிறவங்க எல்லாம் டி.வி. பார்த்துக்கிட்டு, வேடிக்கை பார்த்துகிட்டு வர்றப்ப என் பக்கத்துல உட்கார்ந்து வர்றவங்க மட்டும் தூங்கி,தூங்கி விழுகிறாங்களே!  ஏன் பாஸ்?






                                                                           ஆனா இன்னொரு விஷயம் சொல்லியே
ஆகணும் சார்.  நம்ம பிரைவேட் பஸ்ல பாட்டு,  படம்னு போடறாங்க பாருங்க!
அவங்க வைக்கிற சத்ததில பஸ்ஸ்டாப்பில படுத்து இருக்கிற பச்சை பிள்ளைங்க கூட மிரண்டு போய் அழுக ஆரம்பிச்சிரும். சாமி படம் DVD வந்த சமயத்தில பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டுக்கு போன பிறகும் கூட ஹாரிஸ் ஜெயராஜ் காதுக்குள்ள உட்கார்ந்துகிட்டு இருக்கிற மாதிரியே இருந்துச்சு.. பக்கத்துல இருக்கிற பஸ்க்கும் சேர்த்து தான் சவுண்டு வைப்பாங்க. அதுலயும் நம்ம ஆளுங்க  அசராம தூங்குவாங்க பாருங்க. சான்சே இல்லை. மறுபடியும் முதல் வரி தான்.


                                                                                      சரி, விடுங்க, Why Stomach Burn?
"தோள் கொடுப்போர் சங்கம்"  அப்படின்னு  ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். சேர ஆசைப்படுபவர்கள் உடனடியாக அப்ளை செய்யவும். சட்டைதைக்கும் போதே Shoulder ல Sponge வைச்சு தைக்கிறது, Shoulder க்கு என்றே ஸ்பெசலா ஜிம்முக்கு போய் Exercise செய்வது என்று நிறைய ஐடியா கைவசம் இருக்கு. நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச ஐடியா இருந்தா கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க. சிட்டி பஸ்ல கூட தூங்கி விழுறாங்க சார்.




                                     "ஸ்டாப் வந்தாலும் எழுப்ப மாட்டீங்களே!"





மீண்டும் சந்திப்போம்.



07 October, 2011

தன் வாயே தனக்கு உதவி - T.R, ன் சூப்பர் டூப்பர்

                                                                            சகலகலா வல்லவர் T.ராஜேந்தரின்
ஸ்பெசல் பேட்டி. ஒரு காலத்தில் சினி பீல்டில் தனக்கென தனி இடத்துடன்
இருந்தவர். பாடல்களும்,வ்ரிகளும் கலக்கலாக இருக்கும். OVER CONFIDENCE
உடம்புக்கு ஆகாது என்பது போல் தனது அதீத நம்பிக்கையாலேயே பீல்ட்
அவுட் ஆகி விட்டார்.  ஆனால் இன்னமும் தான் அதே இடத்தில்இருப்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் கொடுமை.




                                                                            . பல திறமைகளை வைத்திருக்கிறார். இவரின் மிமிக்ரி திறமை குறிப்பிடத்தக்கது. (ஒரு தடவை அவர் வாயேலே இசையமைத்து காட்டிய ஆப்பிரிக்க இசையை கேட்டிருக்கிறீர்களா?) அவர் நேற்று சன் டிவிக்கு அளித்த  பேட்டி இது. டிரம்ஸ், உருமி என சகலத்தையும்
தனது வாயிலேயே வாசிக்கிறார். தோள் தட்டுகிறார்.


 




                                                                              அவர் என்னமோ சீரியஸாக தான் பேசுகிறார். நீங்கள் அதை சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்களா? அல்லது காமெடியாக எடுத்துக் கொள்கிறீர்களா எனக்கு தெரியாது. சிரிக்காமல்
பாருங்கள் பார்ப்போம்.

மீண்டும் சந்திப்போம்.


26 July, 2011

சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது

                                          Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற
ஆள பாத்திருக்கீங்களா?  கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற
இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு
நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம
சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.
இத பாருங்க.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...