1) ரஜினி,சினிமாதுறையில் உள்ள மூன்று பேர் முன் இன்றும் சிகரெட் பிடிக்கமாட்டார். 1.அவர் குரு கே.பாலசந்தர், 2. ஏ.வி.எம்.சரவணன், 3. எஸ்.பி.முத்துராமன்.
2) தான் நடித்ததிலேயே ரஜினிக்கு மிகவும் பிடித்த படம் மகேந்திரனின். 'முள்ளும் மலரும்'.
3) ரஜினி, அமிதாப்பின் 12 படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த ரீமேக் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள்.
4) ஒவ்வொரு படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன், ரஜினி திருப்பதிக்குச் சென்று பாலாஜியைத் தரிசித்த பின்னரே Shooting ஆரம்பிப்பது என்ற வழக்கத்தை இன்றும் பின்பற்றுகிறார்.
5) கண்டக்டர் ஆவதற்கு முன்னர், ரஜினி 'கன்னட சம்யுக்தா' என்ற தினசரியில், 3 நாட்கள் உதவி ஆசிரியராக வேலை செய்தார்.
6) தன் முதல் காரான பியட், முதல் ஸ்கூட்டர் லாம்பரெட்டா அனைத்தையும் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.
7) இளையராஜாவை "சாமி" என்று தான் ரஜினி கூப்பிடுகிறார். ரமண மகரிஷியையும், திருவண்ணாமலையையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். சினிமாவையும் தாண்டிய ஆழ்ந்த நட்பு இருவருக்கும் இடையே உண்டு.
8) ரஜினி இன்றளவும் சாதாரண நோக்கியா 3000 மாடல் போனையே பயன்படுத்தி வருகிறார்.
9) கடுமையாக, உயிரையே உறைய வைக்கும் அளவு ஜில்லிப்பான ருத்ரா பிரயாகில் மற்றவர்கள் தயங்கி நிற்கும் போது, தடாலென வெறும் துண்டுடன் உள்ளே குதித்து ஆனந்தமாய்க் குளிப்பது ரஜினியின் பொழுது போக்கு.
10) ரஜினியின் குசேலன் உருவப்படத்தை அமெரிக்காவின் M&M Candy Company (நம் ஊர் Gems போன்ற மிட்டாய்கள்) ஒவ்வொரு மிட்டாய் மேலும் பொறித்துள்ளது.
11) ரஜினிக்கு மிகப் பிடித்த உணவுப் பொருள்கள் அவித்த வேர்க்கடலையும் சிக்கன் கால்களும் தான்.
12) ரஜினிக்கு மாறு வேடத்தில், தியேட்டருக்குச் சென்று அடுத்தவர் நடித்த படத்தைப் பார்ப்பதில் கொள்ளைப் பிரியம்.
"ரஜினி பேரக் கேட்டாலே... " புத்தகத்திலிருந்து.
12-12-12 என்ற Special தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஏற்கனவே ஒரு பதிவில் வெளியிட்ட தளபதி ரீமிக்ஸ் வீடியோ மறுபடியும்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக