25 August, 2012

Catches win the Matches

கிரிக்கெட் விரும்பி பார்க்கும் அனைவரையும் 'அட' போட வைக்கும் விஷயம் ஒன்று உண்டு என்றால் அது கேட்ச் தான். டைவ் அடித்து பிடிக்கும் கேட்சை மறுபடியும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே விக்கெட் விழுந்த பிறகு வரும் விளம்பரங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருத்திருக்கிறேன். அப்படி அட போட வைக்கும் கேட்ச்களின் Gif Images சில. பைல் லோடு ஆக கொஞ்சம் லேட்டாகும்.







Second Innings
பிரமாதமான கேட்ச் பிடிக்கும் யுவராஜ்சிங் மீண்டும் பல சாதனைகள் செய்ய வேண்டும்.



கிரிக்கெட் விளையாட்டில் இங்கிலாந்தின் கை ஓங்கி இருந்த கால கட்டத்தில் விளையாட்டு வீரர்கள் அவர்கள் போட்டிருந்த டிரஸ் கூட அழுக்காமல் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியா ஓரளவுக்கு பரவாயில்லை. தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் விளையாட வந்த பின் தான் பீல்டிங் தனி கவனம் பெற ஆரம்பித்தது. முக்கியமாக பீல்டிங் மன்னன் ஜாண்டி ரோட்ஸ்.



Brawo வின் ரன்னிங் கேட்ச்













தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் போது ஜாண்டி ரோட்ஸ்க்கு மட்டும் 2 கேமராக்கள் தனியாக வைத்தார்கள். ரன் அடிக்கிறாரோ இல்லையோ, எதிரணியின் ரன்னில் குறைந்த பட்சம் 30,40 ரன்களை தடுத்து விடுவார். அவரின் சுறுசுறுப்பு மிகப்பெரிய பலம். பீல்டிங் செய்யும் போது பந்தை பிடித்தவுடன் எழும் அந்த வேகம் யாருக்கும் வராது.






உள்ளே வெளியே

Bichel பந்தை உள்ளே தூக்கி எறிந்து பவுண்டரி லைனுக்கு வெளியே போய் பின் உள்ளே வந்து பிடிக்கும் கேட்ச்.






இந்திய அணியைப் பொருத்த வரை பில்டிங்கில் ஆரம்பத்தில் அசாருதீன் மற்றும் ஜடேஜாவைச் சொல்லலாம். பிறகு ராபின்சிங். (பீல்டிங்கில் தனித்து பாரட்டப்பட்ட முதல் இந்தியர் என்றே சொல்லலாம்). யுவராஜ் சிங், கைப் வருகைக்குப் பிறகு ஓரளவுக்கு இப்பொழுது எல்லா புதிய வீரர்களும் நன்றாகவே பீல்டிங் செய்கிறார்கள்.






பெரிய ஆச்சரியம்
சின்ன நாடான பெர்முடாவின் பெரிய ஸ்பின்னர்(120 kg) Dwayne Leverock சூப்பர் டைவிங் கேட்ச் தான் இந்தியாவுடனான அன்றைய மேட்சின் ஸ்பெசல்



 





Third Umpire முறை முதன்முதலில் Test Matchல் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதலில் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டவர் சச்சின் தெண்டுல்கர். (எத்தனை முதல்)







 




Styne catch பிடிக்கும் இநத படத்தில் தான் எத்தனை விதமான ரியாக்சன். ரன்னர், பவுலர், பேட்ஸ்மேன் எல்லோரையும் விட அந்த அம்பயர் சூப்பர்..




கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாவதற்கு 10 வழிகள் உள்ளன.

  1)   Caught
  2)   Bowled
  3)   Leg Before Wicket
  4)   Hit Wicket
  5)   Timed Out
  6)   Handling the ball
  7)   Obstructing the field
  8)   Hit the ball twice
  9)   Run Out
10)   Stumped



கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கீழே உள்ள வீடியோவை கவனித்து பார்த்தால் தெரியும். முதலில் செகண்ட் சிலிப்பில் உள்ளவர் பிடித்து பந்து அவரிடமிருந்து நழுவி கீப்பரிடம் சென்று பிறகு அவரும் விட்டு மறுபடி செகண்ட் சிலிப் வீரர் காலில் பட்டு (காலால் தூக்கி விட்டு) கேட்ச் பிடிக்கிறார்.




விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி
 விடாமல் போராடும் பொல்லார்டு. (எத்தனை தடவை)



Last but not Least

பீல்டிங் மன்னன் ஜாண்டியின் சூப்பர் கேட்ச்.








மீண்டும் சந்திப்போம்




6 comments:

  1. superappu//////////........,,,,,,,,,,,

    ReplyDelete
  2. மிக நல்ல வீடியோக்கள்

    அம்பயர் டான்ஸ் சூப்பர்


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. இது வீடியோ இல்லை,GIF Images. பகிர்வுக்கு நன்றி!

      Delete
  3. நல்ல தொகுப்பு... பாராட்டுக்கள்...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!

      Delete
  4. Casino de MCD
    Casino de MCD 광주광역 출장샵 in Berlin, Germany. in the 광주광역 출장샵 online gambling 아산 출장안마 establishment, offering gambling, gaming, and poker at 제주도 출장안마 home. in the online gambling establishment, 부천 출장샵 offering gambling, gaming, and poker at home.

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...