21 August, 2012

உண்ணாவிரதம் இருந்த குரங்குகள்


ஒரு காட்டில் நிறைய குரங்குகள் கூட்டம் கூட்டமா வாழ்ந்து வந்தது. அந்த காட்டை சிங்கம் ஒன்று ஆட்சி செய்து கொண்டு வந்தது.  அந்த சிங்கம் அநியாயத்துக்கு அந்த காட்டில இருந்த மிருகங்களை டார்ச்சர் செய்து வந்தது. எல்லா மிருகங்களும் கொதித்துப் போய் இருந்தாலும் யாராலும் சிங்கத்தை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியவில்லை.  காட்டில் இருந்த குரங்குகள் எல்லாம் இது விஷயமாக முடிவு எடுக்க ஒரு கூட்டம் கூட்டின.
 அந்த கூட்டத்தில் இருந்த வயதான குரங்கு நம்மால் பெரிய அளவில் போராட முடியாது. அதனால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதம் இருந்து நம்து எதிர்ப்பை தெரிவிப்போம் என்று சொன்னது. எந்த குரங்குக்கும் சாப்பிடாமல் இருந்து பழக்கமில்லை என்றாலும் சிங்கத்திடம் கடிபட்டு சாவதற்கு இந்த டீல் எவ்வளவோ பெட்டர் என்ற முடிவுக்கு வந்தது. 





ஒரு நல்ல நாளாக பார்த்து எல்லா குரங்குகளும் ஓரிடத்தில் ஒன்று கூடி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தன.  அப்போது ஒரு வயதான குரங்கு நாம் எல்லோரும் இப்படி கீழே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பது எனக்கு சரியாகப்படவில்லை என ஆரம்பித்தது. திடீரென்று யானைக்கூட்டம் ஒன்று ஓடி வந்தால் நாம் எல்லோரும் சட்னி ஆகிவிடுவோம். உண்ணாவிரதம் இருப்பதால் டயர்டாக வேறு இருப்போம், சட்டென்று ஓடவும் முடியாது. அதனால் நாம் எல்லோரும் எப்பவும் போல் மரம் மேல் ஏறி உட்கார்ந்து கொள்வோம். அது தான் நமக்கு பாதுகாப்பு என்றது. மற்ற குரங்குகளும் ஆமோதிக்க, எல்லா குரங்குகளும் மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது.
 அடுத்து ஒரு குரங்கு திடீரென்று ஒரு சிறுத்தை மரத்தின் மேல் ஏறி வந்து விட்டால் என்ன செய்வது, நாம் எல்லோரும் நுனி கிளையில் போய் உட்கார்ந்து கொள்ளலாம். மிருகங்கள் வந்தால் அடுத்த மரத்திற்கு தாவி செல்ல வசதியாக இருக்கும் என்றதும், மற்ற குரங்குகளும் அதை ஆமோதித்து நுனி கிளையில் பழங்கள் காய்த்து தொங்கும் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.









இன்னொரு குரங்கு அடுத்த சந்தேகத்தை கிளப்பியது. உண்ணாவிரதம் முடிந்தவுடன் நாம் மிகவும் களைப்பாக இருப்போம். அந்த நேரத்தில் நம்மால் நன்கு பழுத்த பழங்களை தேடி எடுக்க முடியாது. அதனால் நாம் இப்போதே நன்றாக பழுத்த பழங்களை பொறுக்கி எடுத்து கையில் வைத்துக் கொள்வோம். விரதம் முடிந்தவுடன் சாப்பிட வசதியாக இருக்கும் என்றது. மேலும் பழுத்த பழங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உதிர்ந்து கீழே விழுந்து விடலாம் என்று சொல்லவும், உடனே எல்லா குரங்குகளும் நல்ல பழங்களை எடுத்து கையில் வைத்துக் கொண்டது.அடுத்து ஒரு குரங்கு ஆரம்பித்தது. பார்ப்பதற்கு எல்லா பழங்களும் நல்லா இருப்பது போல் தான் இருக்கும், உள்ளே பூச்சி எதுவும்
 கடித்து இருந்தால் நம்க்கு தெரியாது. அதனால் நாம் கையில் வைத்திருக்கும் பழத்தை ஓரே ஒரு தடவை கடித்து மட்டும் பார்த்துக் கொள்வோம். ஆனால் சாப்பிட்டு விடக்கூடாது ஜாக்கிரதை என்றது. எப்படா ! என்று இருந்த எல்லா குரங்குகளும் பழத்தை வாயில் வைத்தவுடன், பழக்கதோஷத்தில் முழுங்கி விட்டன.  உண்ணாவிரதமும் ஆரம்பித்த வேகத்தில் முடிந்து விட்டது.





மீண்டும் சந்திப்போம்.




17 comments:

  1. இதுல உள்குத்து எதுவும் இல்லையே?

    :D :D :D

    ReplyDelete
  2. நம்ம கருணாநிதி நடத்துன உண்ணாவிருதம் போல இருக்கு

    ReplyDelete
  3. நல்ல (உண்ணா) விரதம்....! நன்றி (TM 3)

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கும்,TMக்கும் நன்றி!

      Delete
  4. Replies
    1. வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!

      Delete
  5. மனம் ஒரு குரங்கு அல்லவா!


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்.
      பகிர்வுக்கு நன்றி!

      Delete
  6. கூடங்குளத்துல உதயகுமார் எல்லாரையும் சேர்த்துகிட்டு இருந்த உண்ணாவிரதத்தை குறிப்பிடுறமாதிரியில்ல தெரியுது.......

    ReplyDelete
    Replies
    1. இது கதை மட்டும் தாம்பா!, வேற ஏந்த விளையாட்டுக்கும் நான் வரலை.

      Delete
  7. இந்த கதை நன்றாக உள்ளது, நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  8. நல்ல கதை! அருமையானபகிர்வு!

    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி!

      Delete
  9. மனம் ஒரு குரங்கு ,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!

      Delete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...