11 August, 2012

திருடுவது தப்பில்லை

பொதுவாக மக்களுக்காக (!!!)  உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் தான் கொடுப்பார்கள். ஆனால் உத்திரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சிவபால் யாதவ் அரசு அதிகாரிகளிடம் உங்கள் உழைப்புக்கேற்றவாறு கொஞ்சமாக அரசுப்பணத்தை திருடிக்கொள்ளலாம் தப்பில்லை. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு கொள்ளை அடித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.  






பத்திரிக்கைகளும், எதிர்க்கட்சிகளும் கண்டனக்குரல் எழுப்பியதும், முதலில் இது அதிகாரிகளுக்காக நடந்த கூட்டம், மீடியாவிற்கு அனுமதியில்லை என்று சொல்லியிருந்தும் நீங்கள் எப்படி உள்ளே வரலாம் என்று கோபப்பட்டார்.. பிறகு சொன்ன வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று வருத்தப்பட்டார். பிறகு ஏன் தான் நான் என்ன சொன்னாலும் மீடியா பெரிதுபடுத்துகிறதோ? என்று சலித்துக் கொண்டார்.. இவர் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் அபிலேஷ் யாதவின் சித்தப்பா. (சமாஜ் வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவின் தம்பி). 






அப்படின்னா திருட்டுக்கும் கொள்ளைக்கும் என்ன வித்தியாசம். சின்னதா செஞ்சா திருட்டு, பெரிசா செஞ்சா கொள்ளைன்னு எடுத்துக்கிட்டா பெரிய திருட்டை சின்ன கொள்ளைன்னும், சின்ன கொள்ளைய பெரிய திருட்டுன்னு சொல்லலாமா?. ஒரு வேளை சிவபால் யாதவ், அதிகாரிகள் செஞ்சா திருட்டு, அரசியல்வாதிகள் செஞ்சா கொள்ளை என்று நினைத்திருப்பாரோ?. எனக்கு என்னமோ, யாருக்கும் தெரியாம செய்வது திருட்டு, ஆட்களை அடித்துப் போட்டு ரணகளமாய் அள்ளிக்கொண்டு போவது கொள்ளை என்று தோன்றுகிறது. விபரம் தெரிந்தவர்கள் (திருட்டு, கொள்ளையில் இல்லை, தமிழில்) கொஞ்சம் விளக்கமாக சொன்னால் தேவலை.






மீண்டும் சந்திப்போம்.


14 comments:

  1. நல்ல அமைச்சர் நல்ல நாடு!

    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி நல்ல அமைச்சர் இருந்தா நாடு நல்ல நாடா தான இருக்கும்.

      Delete
  2. ...ம்... நாடு விரைவில் வெளங்கிடும்....

    நன்றி... (TM 1)

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  3. உண்மையைத்தான் சொல்லியிருக்காரு :))

    ReplyDelete
  4. Replies
    1. பகிர்வுக்கு நன்றி!

      Delete
  5. சும்மா சின்ன அளவில் திருடிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    பெரிய அளவில் அடித்து தங்களுக்குப் போட்டியாக வந்து விடக் கூடாதே என்ற நல்லெண்ணமும் இருக்கிறது.

    என்னைக் கேட்டால், அரசாங்கமே திருடர்களால் நடத்தப் படுகிறது.

    திருடனிடம் திருடுவதில் தவறில்லை.

    ReplyDelete
  6. //திருடனிடம் திருடுவதில் தவறில்லை.//
    ஆனால் அவர் திருடச்சொன்னது அரசுப்பணத்தை அல்லவா?

    ReplyDelete
  7. அவர் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா. அப்படித் தானே நடக்குது. அதைத் தடுப்பதற்கு யாரும் எந்த முயற்சியும் செய்வதில்லை. பாவம் அவர் சொன்னதை வாபஸ் வாங்கிட்டா எல்லாம் சரியாயிடுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அதற்காக இப்படி பேசிக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்ச குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் போகும் அல்லவா!

      Delete
  8. உண்மையைத்தான் சொல்லியிருக்காரு :))

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி!

      Delete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...