Showing posts with label kamal. Show all posts
Showing posts with label kamal. Show all posts

07 November, 2011

கமல் - படத்தில் இல்லாத பாடல்

                                                                          80 களில் படங்களுக்கு பூஜை போடும்
போது  எலுமிச்சை பழத்துடன், அப்பாவை கொன்றவனை பழி வாங்கும்  கதையையும்   எடுத்துக் கொண்டு தான் வருவார்கள். வெளி வரும் படத்தில்
பெரும்பாலான படங்கள் இதே கதையில் தான் வரும். ஆனால் அந்த கதையை
இப்படியும் எடுக்க முடியுமா? என்று வியக்கும்படி 1989ல் கமல் எடுத்திருந்தார்.



                                                         
                                                                            'அபூர்வ சகோதரர்கள்'   -   இந்த கதைக்கு
இது போதும் என எண்ணாமல் அந்த படத்திற்கு அவர் உழைத்த உழைப்பு தான்
அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. அப்பு கமலாக டெக்னாலஜி நிறைய
இல்லாத அந்த காலகட்டத்திலும் அற்புதமாக எடுத்திருந்தார். இசை,காமெடி,
சண்டை என எல்லாவற்றிலும் முழு திருப்தியுடன் வந்த அபூர்வ சகோதர்கள்
எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் சேர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.


  

  ஆனால் படம் கிட்டத்தட்ட பாதி எடுத்து முடித்த நிலையில் அதில் திருப்திஅடையாத கமல் எடுத்த படத்தை அப்படியே பரணில் தூக்கி வைத்து விட்டு நிறைய மாற்றங்கள் செய்து புதுசாக எடுக்க ஆரம்பித்து விட்டார். 
நினைத்து பாருங்கள்!.  
எந்த தயாரிப்பாளருக்கு அப்படி ஒரு நினைப்பு வரும். ( அபூர்வ சகோதரர்கள் - ராஜ்கமல் புரொடக்சன்ஸ்).  கமல் செய்தார். ஏன் என்றால் கமல் தனது படங்களை அந்த அளவு காதலித்தார். 

     



                                                                    இளையராஜாவின் இசையில் கமல்
அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக முதலில் எடுத்த இந்த பாடலை பாருங்கள். எத்தனை  மாற்றங்கள். மனோரமாவிற்கு பதில்  காந்திமதி உள்ளார். ஜனகராஜ் மற்றும் சிவாஜி (காமெடியில் எங்கேயோ போயிட்டாங்க!) வேறு வேறு கெட்டப்பில் உள்ளனர். இந்த பாடலை இளையராஜா வேறு எந்த படத்திலும்
உபயோகப்படுத்தவும் இல்லை.






                                    

      
                                                       இன்று பிறந்தநாள் காணும்
                                                                         கமலுக்கு
                                          தமிழ் பட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.




மீண்டும் சந்திப்போம்.




11 September, 2011

கூகிளின் புதிய தேடல் மற்றும் கமலின் காதலர்

                                                             முதலில் ஒரு  புகைப்படம். இது  நெட்டில் துழாவிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது. கமலை மிக அழகாக
வரைந்திருந்தார்கள். அந்த படம் கீழே




                                                                             சூப்பரா இருக்கில்ல! நானும் இது மாதிரி
தான் வரையனும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். என்ன ஒரு சிக்கல்னா?
நமக்கு எப்பவும் மாடர்ன் ஆர்ட் தான் வருது. அதாவது நான் ஒன்னு வரைஞ்சா
அது ஒரு மாடர்னா போகுது. சரி இந்த மாதிரி வேற படம் இருக்கானு கூகிள்ல
தேடும் போது கூகிளோட இந்த (புது!)  வசதி என் கண்ணுல பட்டுச்சு.இது எனக்கு
எப்பவோ தெரியும் சொன்னீங்கன்னா!  ஏன் எனக்கு அப்பவே சொல்லலைனு
கேட்பேன்னு இப்பவே சொல்லிட்டேன்.


                                                                          பொம்பள பிள்ளைங்கள விட அதிகமா
கண்ணுல பட்ற கூகிளோட ஹோம் பேஜில் 'இமேஜஸ்' கிளிக்கி விட்டு   பார்த்தால் வரும் ஸ்கீரினில் உள்ள Search bar ன் கடைசியில் (நீலக்கலரில்
வட்டமிட்டுள்ளது) கேமராவில் (கேமரா தான அது?)  கிளிக் செய்யுங்கள்.





                                                            கொஞ்சம் பெரிதாக வரும் சர்ச் கட்டத்தில்
இரண்டு ஆப்சன்கள் உள்ளது. முதலில் உள்ள ஆப்சன் படி நாம் தேட
விரும்பும் போட்டாவின்  URL இருந்தால் அதை பேஸ்ட் செய்து தேடலாம்.
அடுத்த ஆப்சன் மூலம் நமது கணினியில் உள்ள படத்தை அப்லோடு செய்து
தேடிப் பார்க்கலாம். நம்மிடம் உள்ள போட்டாவை டிராக் செய்து சர்ச் கட்டத்திற்குள் விட்டாலும் போதும்.

                                 
                            
                                                                                  நாம் கொடுத்த புகைப்படம் உள்ள
தளங்களை காண்பித்து விடுகிறது. நான் அது போல் முதலில் பார்த்த கமல் படத்தை கொடுத்து  பார்த்த போது அவரின் தளத்தை பார்த்தேன். மனுசன்
கமல் பிறந்ததில் இருந்து அவர் ரசிகரா இருப்பார் போலிருக்கு. களத்தூர்
கண்ணம்மாவிலிருந்து இப்ப இருக்கும் கமல் வரைக்கும் வரைஞ்சு தள்ளி
இருக்கிறார்.

சில படங்கள்




















                                                                                     வேறு பல இயற்கை காட்சிகளையும்
வரைந்திருக்கிறார். அவரின் தளத்திற்கு சென்று பாருங்கள்


                                                http://latchuart.wordpress.com/


மீண்டும் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...