Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

07 November, 2011

கமல் - படத்தில் இல்லாத பாடல்

                                                                          80 களில் படங்களுக்கு பூஜை போடும்
போது  எலுமிச்சை பழத்துடன், அப்பாவை கொன்றவனை பழி வாங்கும்  கதையையும்   எடுத்துக் கொண்டு தான் வருவார்கள். வெளி வரும் படத்தில்
பெரும்பாலான படங்கள் இதே கதையில் தான் வரும். ஆனால் அந்த கதையை
இப்படியும் எடுக்க முடியுமா? என்று வியக்கும்படி 1989ல் கமல் எடுத்திருந்தார்.



                                                         
                                                                            'அபூர்வ சகோதரர்கள்'   -   இந்த கதைக்கு
இது போதும் என எண்ணாமல் அந்த படத்திற்கு அவர் உழைத்த உழைப்பு தான்
அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. அப்பு கமலாக டெக்னாலஜி நிறைய
இல்லாத அந்த காலகட்டத்திலும் அற்புதமாக எடுத்திருந்தார். இசை,காமெடி,
சண்டை என எல்லாவற்றிலும் முழு திருப்தியுடன் வந்த அபூர்வ சகோதர்கள்
எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் சேர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.


  

  ஆனால் படம் கிட்டத்தட்ட பாதி எடுத்து முடித்த நிலையில் அதில் திருப்திஅடையாத கமல் எடுத்த படத்தை அப்படியே பரணில் தூக்கி வைத்து விட்டு நிறைய மாற்றங்கள் செய்து புதுசாக எடுக்க ஆரம்பித்து விட்டார். 
நினைத்து பாருங்கள்!.  
எந்த தயாரிப்பாளருக்கு அப்படி ஒரு நினைப்பு வரும். ( அபூர்வ சகோதரர்கள் - ராஜ்கமல் புரொடக்சன்ஸ்).  கமல் செய்தார். ஏன் என்றால் கமல் தனது படங்களை அந்த அளவு காதலித்தார். 

     



                                                                    இளையராஜாவின் இசையில் கமல்
அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக முதலில் எடுத்த இந்த பாடலை பாருங்கள். எத்தனை  மாற்றங்கள். மனோரமாவிற்கு பதில்  காந்திமதி உள்ளார். ஜனகராஜ் மற்றும் சிவாஜி (காமெடியில் எங்கேயோ போயிட்டாங்க!) வேறு வேறு கெட்டப்பில் உள்ளனர். இந்த பாடலை இளையராஜா வேறு எந்த படத்திலும்
உபயோகப்படுத்தவும் இல்லை.






                                    

      
                                                       இன்று பிறந்தநாள் காணும்
                                                                         கமலுக்கு
                                          தமிழ் பட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.




மீண்டும் சந்திப்போம்.




21 October, 2011

ரிங் டோன்கள் Calling

                                                                               IPL நடந்த போது அடிக்கடி காட்டிய
விளம்பரங்களில் Projector Type Phone ம் ஒன்று. அந்த நேரத்தில் ஒரு நண்பருடன்
பஜார் பக்கம் போயிருந்த போது ஒரு கடையில் China model Projector type phone ஒன்று விற்பனைக்கு இருந்தது. தரம் பற்றி கேட்ட போது 'வித்தவரு பக்கத்தில தான நிக்கிறாரு, அவரு கிட்டேயே கேட்டுக்குங்க!' என்றார் கடைக்காரர். நண்பரிடம் எப்பங்க வாங்கினீங்க! ஏன் அதுக்குள்ள வித்துட்டீங்க என்று கேட்டதுக்கு. அத விடுங்க, அந்த மாடல் ஒன்னும் சரியில்ல என்று எப்பவும் சொல்லும் பதிலையே சொன்னார். வாரம் ஒரு மாடல் செல்போன் வைத்திருப்பவர்களை பார்த்தால்  ஆச்சர்யமாக தான் இருக்கு. புது மாடல் செல்போன் வாங்கி அடுத்த வாரமே மட்டமான விலைக்கு விற்பவர்களை பார்த்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.




                                                                நான் ரொம்ப நாளா நோக்கியா 3310 மாடல்
போன் தான் வைத்திருந்தேன். நெட்வொர்க்கும், பேட்டரியும் ரொம்ப திருப்தி
ஆக இருந்தது. ஆனால் கால் வரும் போது கேட்ட ரிங்டோனை கேட்டு அருகில்
இருந்தவர்கள் கொலைவெறியோடு பார்த்ததாலும், பேருந்து பயணத்தில் பெரும்பாலான நேரங்களை செலவழிக்க வேண்டி இருந்ததால் பாடல்களை
கேட்பதற்காகவும் கேமரா மற்றும் மெமரி கார்டுடன் கூடிய செல்போனுக்கு
மாறினேன்.

                                                             முதன்முதலில் ஆசைஆசையாய் வைத்த
ரிங்டோன் தும்பி வா மலையாள பாடல். ரொம்ப நாளுக்கு அது தான்
வைத்திருந்தேன். பிறகு அவ்வப்போது ரிங்டோன் மாற்றிக்கொண்டே
வந்திருக்கிறேன். குறிப்பாக
சங்கீத மேகம் ,
பொத்தி வைச்ச ,
முத்துமணி,
ராதா,
ஒரு சிரி கண்டால் ,
ஹல்கே சே போலே 
போன்ற பாடல்கள் நிறைய இருந்தாலும் இளையராஜா தவிர்த்து
சாமுராய் ,
எனக்கென ,
செவ்வந்தி,
வேறென்ன ,
மற்றும் தவிர்க்க முடியாத
பச்சைக்கிளி முத்துச்சரம் பிட்
இப்போது
முன்னம் செய்த
மற்றும்
இவளொரு இளங்குருவி
பாடலும் ரிங்டோனாக உள்ளது. புது பாடல்களின் ரிங்டோன் வைப்பதில் உள்ள
பிரச்சனை பொது இடங்களில் அடிக்கடி கேட்க முடிவதால் நம் போனையும்
அவ்வப்போது கால் வந்திருக்கிறதா? என பார்க்க வேண்டியுள்ளது.

                                                              பாடல்களை கவிதை என்றால் ரிங்டோன்களை
ஹைகூ என்று தான் சொல்லவேண்டும். அதனால் இது தான் சிறந்த பாடல்கள்
என்றோ, சிறந்த ரிங்டோன் என்றோ எதுவும் சொல்லவில்லை. எனக்கு பிடித்து
இருந்தது, அவ்வளவு தான். இளையராஜா அடித்த பாடல்களின் BGM  மட்டும்
எடுத்தாலே ரிங்டோன்கள் ஏராளமாய் கொட்டும். ரிங்டோன்களுக்கு என்றே
அளவு எடுத்தது போல் சில பாடல்களின் குறிப்பிட்ட பகுதிகள் அமைகிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் பல பாடல்கள்  (உன்னாலே,உன்னாலே படம் வந்த
புதுதில் ஜூன் போனால் ஆரம்ப இசை பிட் கேட்காமல் வீட்டிற்கு வர முடியாது.
அந்தளவுக்கு பல பேரின் ரிங்டோனாக இருந்தது) , A.R.ரகுமான் (புது வெள்ளை
மழை),யுவன், அவ்வப்போது வரும் ஹிட் சாங்ஸ் என பட்டியல் நீளும். இதில்
நான் உபயோகித்த ரிங்டோன்ஸ்  பற்றி மட்டுமே கூறியுள்ளேன். அவ்வளவே!


மீண்டும் சந்திப்போம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...