'கரணம் தப்பினால் மரணம்' என்ற ரீதியில் நித்தம் நித்தம் பயணம் செய்யும் மக்களின் வழியில் புகுந்து விளையாடும் வாகனங்களில் முதல் இடம் பெறுவது நிச்சயமாக ஷேர் ஆட்டோக்கள் தான். இஷ்டத்திற்கு ஓடித்திரிந்த மினிபஸ்காரர்களை நல்லவர்கள் ஆக்கிய பெருமை ஷேர் ஆட்டோக்களுக்கு தான் சேரும்.
சமீபத்தில் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகில் ஒரு தந்தை தன் மகளை கல்லூரிக்கு பைக்கில் இறக்கி விடசென்ற போது முன்னாள் சென்ற ஷேர் ஆட்டோ தீடிரென இடது புறமாக திரும்ப பைக் ஓட்டி வந்தவர் தடுமாறி ரோட்டில் மகளுடன் கீழே விழுந்திருக்கிறார். பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி தந்தை மகள் இருவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகி விட்டனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை போலிஸ் தேடுகிறது என்பது செய்தியாகி விட்டது. ஆனால் தீடிரென்று திருப்பிய ஷேர் ஆட்டோவும், ஆட்டோவில் ஏறிய பயணியும் நிற்காமல் கூட போய் விட்டனர்.
வெறும் 7 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரோட்டைப் பார்த்து வண்டி ஒட்டாமல் ஓரத்தில் யாராவது தலையை சொறிந்தால் கூட சட்டென்று வண்டியை திருப்பும் ஷேர் ஆட்டோக்களால் தினம்,தினம் விழுந்து எழும் வாகனங்கள் அதிகம். பின்னால் வண்டி வருவதும் வராததும் நம் அதிர்ஷ்டத்தை பொருத்தது. ஆனால் ஷேர் ஆட்டோ என்றால் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம் என்ற எண்ணத்தில் நடமாடும் மக்களும் இது மாதிரியான விபத்துகளுக்கு நாம் தான் முதல் காரணம் என்பதை உணர வேண்டும் . சிறிது தூரம் நடந்து சென்று ஏறிக்கொள்வதால் நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
விலை மதிப்பில்லாதது உயிர்
விலை மதிப்பில்லாதது உயிர்
மீண்டும் சந்திப்போம்.
ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்துக்கள். கவனம் அவசியம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி!
Deleteகருத்துப்பகிர்வு சிந்திக்கத்தகது ..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
Deleteசிந்திக்க வேண்டும் மக்களும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களும். படம் பொருத்தமாய்!
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!
Deleteமக்களும் ஓட்டோ சாரதிகளும் சிந்திக்க வேண்டிய பதிவு!
ReplyDelete"ஓட்டோ சாரதிகளும் "
Deleteவித்தியாசமான சொற்றொடரை உபயோகித்து இருக்கிறீர்கள்.
செய்திக்கு அப்பால் நடந்த நிகழ்வே காரணம் என்பதனை மறந்ததை தெளிவாக உணர வேண்டும் என்பதனை எடுத்துரைத்த உங்கள் கருத்து அருமை.
ReplyDeleteநன்றி .
நன்றி. www.padugai.com Thanks