தீபாவளிக்கு எல்லா விடுகளிலும் வெடி சத்தம் கேட்டதோ இல்லையோ கொசு அடிக்கும் பேட் சத்தம் நன்றாகவே கேட்டது. கரண்ட கட் மற்றும் கொசு தொல்லை காரணமாக இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் பகல் முழுவதும் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அழகில் சிக்கன் குனியாவை விட பல மடங்கு பீதியை டெங்கு கிளப்பிக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளை அதிகம் குறி வைக்கும் டெங்கு கொசுவின் தாக்கம் பயமுறுத்தும் வகையில் உள்ளது.
1) வாந்தி
2) மூட்டுகளில் வலி
3) தலைவலி
4) வாய், ஈறுகளில் ரத்தக்கசிவு
5) காய்ச்சல்
6) கண்ணில் வலி
போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விடுவது உத்தமம். டெங்கு காய்ச்சல் வியாதிக்கு ஓரளவு பெரிய ஆஸ்பத்திரியில் நன்றாகவே சிகிச்சை தருகிறார்கள். இதற்கு தடுப்பு மருந்து சரியாக இல்லாத காரணத்தால் கொசுவை அண்ட விடாமல் வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாக கருதப்படுகிறது.
டெங்கு கொசு உரல், டயர் போன்று தண்ணீர் தேங்கும் இடங்களில் அதிகம் உற்பத்தியாகிறது. எனவே நமது வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகம் தண்ணிர் தேங்காமல் பார்த்துக் கொள்வது நமக்கு மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்லாமல் நாமும் முன்ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது.
மீண்டும் சந்திப்போம்.
வரும்முன் காப்போம்,சுற்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி...
ReplyDeleteஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...
ReplyDeleteநன்றி...
tm1
aamaa aamaa avasiyam ..............
ReplyDelete