தலைப்பு புரிகிறதா?, தவறு ஒன்றும் இல்லை. சுத்தத் தமிழில் கூறியுள்ளேன். அவ்வளவு தான். ஓர் எழுத்துச் சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. நம்மிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஒரே ஒரு சிக்கல். அவைகளில் பெரும்பாலான சொற்கள் புத்தகத்தில் மட்டுமே உள்ளன புழக்கத்தில் இல்லை. தமிழ் ஒரெழுத்துச் சொற்களை கீழே பட்டியலுட்டுள்ளேன்.
தமிழ் ஓரெழுத்து சொற்கள்
|
|
அ
|
எட்டு
|
ஆ
|
பசு
|
ஈ
|
கொடு, பறக்கும் பூச்சி
|
உ
|
சிவன்
|
ஊ
|
தசை, இறைச்சி
|
ஏ
|
அம்பு
|
ஐ
|
ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
|
ஓ
|
வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
|
கா
|
சோலை, காத்தல்
|
கூ
|
பூமி, கூவுதல்
|
கை
|
கரம், உறுப்பு
|
கோ
|
அரசன், தலைவன், இறைவன்
|
சா
|
இறப்பு, மரணம், பேய், சாதல்
|
சீ
|
இகழ்ச்சி, திருமகள்
|
சே
|
எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு
|
சோ
|
மதில், அரண்
|
தா
|
கொடு, கேட்பது
|
தீ
|
நெருப்பு
|
து
|
கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
|
தூ
|
வெண்மை, தூய்மை,
|
தே
|
நாயகன், தெய்வம்
|
தை
|
மாதம், தையல்
|
நா
|
நாக்கு
|
நீ
|
நின்னை
|
நே
|
அன்பு, நேயம்
|
நை
|
வருந்து, நைதல்
|
நொ
|
நொண்டி, துண்பம்
|
நோவு
|
நோவு, வருத்தம்
|
நெள
|
மரக்கலம்
|
பா
|
பாட்டு, நிழல், அழகு
|
பூ
|
மலர்
|
பே
|
மேகம், நுரை, அழகு
|
பை
|
பாம்புப்படம், பசுமை, உறை
|
போ
|
செல்
|
மா
|
மாமரம், பெரிய, விலங்கு
|
மீ
|
உயரம், மேலே, ஆகாயம்
|
மு
|
மூப்பு
|
மூ
|
மூன்று
|
மே
|
மேல், மேன்மை
|
மை
|
அஞ்சனம், கண்மை, இருள், செம்மறி ஆடு
|
மோ
|
மோதல், முகர்தல்
|
யா
|
மரம், அகலம்
|
வா
|
அழைத்தல்
|
வீ
|
பூ, அழகு, பறவை
|
வை
|
வைக்கோல், கூர்மை வைதல், வைத்தல்
|
வெள
|
கெளவுதல், கொள்ளை அடித்தல்
|
இப்பொழுது உள்ள SMS மற்றும் Facebook யுகத்தில் ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் ஒரெழுத்து சொற்களாகி விட்டன. உதாரணத்திற்கு C = See, Y = Why, U = You, R = Are, V = We. இன்னும் நிறைய இருக்கிறது. SMS அதிகம் உபயோகிப்பவர்களை கேட்டால் அள்ளி வீசுவார்கள். ஆனால் நாம் நிறைய ஒரெழுத்து சொற்களை கையில் வைத்துக் கொண்டு உபயோகம் செய்யாமல் வைத்திருக்கிறோம். குறைந்த பட்சம் மூன்றுக்கு மூன்று எழுத்துக்களை வீணடிக்காமல் 'மூ' என்றும், நாட்டில் பல அரசியல்வாதிகள் 'வெள'வுகிறார்கள் என்றும் எளிதாக சொல்லலாம்.
மீண்டும் சந்திப்போம்.
சேமித்துக் கொள்ள வேண்டிய நல்ல தொகுப்பு... நன்றி...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி... தனபாலன் சார்.
ReplyDeleteதமிழ் மொழியில் இவளவு இருக்கிறது என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்..உங்கள் பகிர்வுக்கு மிக நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வருகைக்கு நன்றி!
Deleteசூப்பர் தமிழ் பற்று...............
ReplyDeleteதமிழ் பற்றிலும் 'சூப்பர்' தானா?
Delete