10 February, 2012

சச்சினும் தோனியும்

சச்சின் மற்றும் தோனி பெயரில் சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ளது. சச்சின் பெயரில் Boost வழங்க Why this கொலவெறி டீம் கிட்டத்தட்ட அதே சாயலில் 'Sachin is the secret of INDIA's  energy' என்ற பெயரிலும், தோனி பெயரில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இளையராஜா இசையிலும் பாடல்கள் வெளியாகி உள்ளது. முதலில் சச்சின்.




பட்டி தொட்டி என்றில்லாமல் நாடுகளை கடந்து ஹிட் அடித்த ரஜினி குடும்ப டீமின் அடுத்த வெளியீடு.
வழக்கம் போல் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.
வழக்கம் போல் அனிருத் அதே சாயலில் இசையமைத்துள்ளார்.
Extra Fitting  அனுஷ்கா
வழக்கம் போல் அழகாய் உள்ளார்.
Why this கொலவெறி ஹிட்டானதற்கே பல பேர் கொலவெறியுடன் அலைகிறார்கள். அதற்குள் அதே போல் இன்னொரு பாடல். கொலவெறி பாடல் ஹிட்டானதற்கு மார்கெட்டிங்  தான் காரணம் என்று கூறப்பட்டாலும் பாடல் எனர்ஜிட்டாக தான் இருந்தது.  நண்டு, சிண்டு கூட பாடிக்கொண்டு அலைந்தது. ஆனால் இது போன்ற பாடல்களின் ஆயுட்காலமும் கம்மி. நாளடைவில் மறந்து விடுவோம். சச்சின் போன்ற மாஸ்டர் பேட்ஸ்மேனின் புகழ் பாட எடுத்த பாடல் காலம் கடந்து நிற்கும் படி எடுத்திருக்கலாம். சச்சினை வைத்து சில ஷாட்ஸ் கூட எடுக்காமல் பழைய கிளிப்பிங்ஸ்,போட்டோவை வைத்தே முழுப்பாடலையும் முடித்து விட்டார்கள். எப்படி இருந்தாலும் என்னைப் போன்ற சச்சின் ரசிகர்களுக்கு ரஜினி படம் Opening Show பார்த்த குதூகலத்தை தருகிறது பாடல்.
பாடல் பார்க்க:



அடுத்து தோனி
இளையராஜா தன் இசையை கேட்க வருபவர்கள் மட்டும் வந்தால் போதும்  என தனக்கென ஒரு கடையை நடத்திக்கொண்டு வருகிறார். பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி வழக்கமான பாடல்கள். ஒரே ஆச்சர்யம் மற்றும் சந்தோசம்.
வாங்கும் பணத்துக்கும்  என ஆரம்பிக்கும் பாடல். SPB தன்னை அடித்துக் கொள்ள ஆளில்லை என சம்மட்டி அடி அடித்து நிருபித்திருக்கிறார். மற்றுமொரு ஆச்சர்யம் பிரபுதேவா. மெலடியான இந்த பாட்டிற்கு தனது Favourite Steps மூலம் மேலும் அழகூட்டியுள்ளார்.  

மீண்டும் சந்திப்போம்.


08 February, 2012

எங்க சட்டசபையைப் போல ஏது மச்சான்.

சமீபத்திய ஹாட்டாபிக் கர்நாடக சட்டசபையில் பிட்டு படம் பார்த்த அமைச்சர்கள் மேட்டர் தான். அதில் ஒருவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இலாகா அமைச்சர். ( நல்லா மேம்படுத்திருவாரு). நம்ம நாட்டு அரசியல்வாதிகள் சட்டசபையில்  சண்டை போடாம  இருப்பதே அதிசயம். அதிலயும் நாட்டு பிரச்சனைகளைப் பற்றி பேசுவது ரொம்ப ரொம்ப அதிசயம். அந்த மாதிரி ஒரு வகுப்புவாத பிரச்சனையைப் பற்றி சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது தான் லட்சுமன் சவடி மற்றும் சி.சி.பட்டில் என்ற இரண்டு அமைச்சர்களும் படா சீரியஸாக செல்போனில் பிட்டு படம் பார்த்துக் கொண்டிருந்ததை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறது.






இது சம்பந்தமான கேள்விக்கு பதிலளித்த லட்சுமன் சவடி பிரச்சனைக்குரிய உடுப்பி தீவுத்திருவிழா சம்பந்தப்பட்ட படத்தை தான் செல்போனில் பார்த்ததாக கூறியுள்ளார்.(அது ஒரு தனிக்கூத்து, Tourism த்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் குதாம் பார்ட்டிகளைக் கூப்பிட்டு குத்துப்பாட்டு ஆட விட்டிருக்கிறார்கள்.) மற்றொரு அமைச்சரான சி.சி.பட்டீல் வெளிநாட்டில் நடந்த ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார். மொத்தத்தில் ஓட்டுப்போட்டவங்களுக்கு நல்லா படம் காட்டுறாங்க!.



                                       
                              சர்ச்சைக்குரிய உடுப்பி தீவுத்திருவிழா ரேவ் நடனக்குழு



டிஸ்கி நீதி :

1) தப்பு செய்யக்கூடாது.

2) செஞ்சாலும் மாட்டக்கூடாது.

3) மாட்டினாலும் ஆளாளுக்கு மாத்தி, மாத்தி பேசக்கூடாது.


மீண்டும் சந்திப்போம்.



27 January, 2012

காசு மேலே காசு வந்து

விவசாய பொருட்கள் விளைச்சலைப் பொருத்து ஒரு நாள் விலை உச்சத்தில் இருக்கும், மறு நாள் அதல பாதாளத்தில் இருக்கும். ஆனால் செயற்கையாக உருவாக்கப்படும் விஷயங்களில் இது போல் ஏற்றத்தாழ்வுக்கு காரணங்கள் பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில்லறை காசுகள் அந்த ரகம் தான். சில வருடங்களுக்கு முன் சில்லறை காசுகள் சீ,சீ என்று சீரழிந்து கொண்டு இருந்தன. லாரியில் எல்லாம் சில்லறை காசுகள் மூட்டை கட்டி பயணம் செய்தது. ஒவ்வொரு வியாபாரியின் கல்லாவிற்கு கீழே சில்லறை காசுகள் பாக்கட்,பாக்கட்டாக கிடந்தன. இன்று நிலைமை தலைகீழ். சில்லறை காசுகள் வேண்டுமென்றால் 100 ரூபாய்க்கு 10 முதல் 20 கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. 1,2,5 ரூபாய் சில்லறைகளைப் பொருத்து கமிஷன் மாறுகிறது. 

இருந்த சில்லறைகள் எல்லாம் என்ன ஆயிற்று. RBI வழக்கம் போல் கணக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறது. இத்தனை மில்லியன் சில்லறை காசுகள் வெளியிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அடித்த காசுகள் ஒரு ஒழுங்கு முறையில் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. 50 காசுக்கும் 5 ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை, 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை. இப்ப 50 காசை முன்பு வெளியிட்ட சின்ன 10 பைசா சைஸில் வெளியிட்டுள்ளார்கள். ஏன் இந்த கொலவெறின்னு தெரியல.

பொருத்து, பொருத்துப் பார்த்த மும்பை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவங்க சில்லறைப்பஞ்சத்தைப்போக்க அவங்களே கோதாவில இறங்கிட்டாங்க. வேறென்ன சில்லறைக்காசை அவங்களே அடிச்சிக்கிட்டாங்க. நலல வேளையா ஒரிஜினல் காசு மாதிரியே அடிக்காம முன்பக்கம் காசோட மதிப்பும் மறுபக்கம் அவங்க சங்கத்தோட பெயரையும் போட்டு அடிச்சு வெளியிட்டு விட்டார்கள். மும்பையில் அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களில் எல்லாம் ஒரிஜினல் காசுகளுக்கு பதில் இவர்களின் காசுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் புலங்கிக்கொண்டு இருக்கிறது.




RBI யிடம் கேட்டதற்கு எங்களுக்கு இது சம்பந்தமாய் எந்த புகாரும் வரவில்லை என்றிருக்கிறார்கள். ஆனால்  இது ஒன்றும் புதிதில்லை. 1985 ம் வருட குமுதம் இதழில் வந்த துணுக்கு ஒன்று.


டெல்லியில் உள்ள சில்லறைப் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற 10 பைசாக் கூப்பன்களை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். பஸ்ஸில் மட்டுமல்ல, இந்தக் கூப்பன்களைக் கடை, ஓட்டல்,தியேட்டர் எங்கு வேண்டுமானாலும் கொடுத்துத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

சிகரம் வைத்தாற்போல் நான் புது டில்லியை விட்டு புறப்படும்போது பாக்கெட்டிலிருந்த சில கூப்பன்களை ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டான்.
                                                                                                         - ஜி.மோஹன் சந்திரன்.



பெரிய நிறுவனங்களில் சம்பளத்துடன் Cash Coupon என்று கொடுக்கிறார்கள். அதை குறிப்பிட்ட ஸ்டோர்களில் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கிளப்களில் கொடுக்கப்படும் டோக்கன்கள் கூட ஒரு வகையில் இது போன்ற மாற்று ஏற்பாடு தான். ஆனால் என்ன ஒன்று, மும்பை வியாபாரிகள் இந்த தடவை ஒரிஜினல் காசு போலவே தோற்றமளிக்கும்படி அவர்கள் காசை அடித்துள்ளதால் கேள்வி எழுந்துள்ளது.

வருடகணக்காக உள்ள இந்த சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க அரசு எந்த ஒரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. விலைவாசியை தான் குறைக்க மாட்டிக்கிறாங்க, தேவைக்கேற்ற காசு கூட அடிச்சு தர முடியவில்லை.


மீண்டும் சந்திப்போம்.


25 January, 2012

சச்சினுக்கு மேலும் நெருக்கடி

சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் முன்பு ஒரு தடவை கொடுத்த பேட்டியில் 'நான் ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் முதல் தடவை களம் இறங்குவது போல் நினைத்துக்கொண்டு தான் விளையாடுவேன்' என்றார். அதனால் தானோ என்னவோ அவர் தனது 100 வது சதத்தையும் முதல் சதம் அடிப்பது போலவே பதட்டத்துடன் எதிர்கொள்கிறார். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக மனிதன் போராடிக்கொண்டிருக்கிறார். பார்ம் இல்லையென்றாலும் பரவாயில்லை. நல்ல பார்மிலும் இருக்கிறார். சமீப காலங்களில் நடந்த தொடர்களில் இந்திய அணியில் அதிக ரன் எடுத்தவர் அவர் தான். பிறகாலங்களில் சச்சின் சாதனைகள் எந்த அளவுக்கு பேசப்படுமோ, அந்த அளவுக்கு அவரின் பதட்டங்களும் மனோதத்துவ  வல்லுனர்களால் அலசப்படும். சச்சினின் 100 வது சதத்தை எதிர்பார்த்து பொறுமை இழந்தவர்களின் காமெடி கலாட்டா கீழே.























அடுத்து பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி





2002 ம் ஆண்டில் சச்சின் மற்றும் கங்குலியை கடத்த திட்டமிட்டதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 6 பேர்களின் மேல் முறையீட்டில் அவர்களின் விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு 8 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே 9 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால் ஒருவர் தவிர மற்ற அனைவரும் விடுதலை செய்யப்படுள்ளனர். ( ஒருவர் மட்டும் தனனை நிரபராதி என அறிவிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளார்.) மேட்டர் என்னன்னா! சச்சினை கடத்த திட்டம் போட்டவரு வெளியே வந்துட்டாரு. சச்சின் 100 வது சதத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கிட்டே இருக்காருன்னு கோபப்பட்டு அவங்களை வெளியே விட்டுட்டாங்களான்னு கேட்கக்கூடாது. அது வேற நியூஸ், இது வேற நியூஸ். சச்சின் இதோ இப்ப செஞ்சுரி போட்டிருவாரு, பார்த்துக்கிட்டே இருங்க.

சச்சின் இன்னும் 100 தடவை 100 அடிக்கவில்லை என்பதால் 1000 பேர் 1000 சொல்வாங்க!., அதை எல்லாம் மனசுல வைச்சுக்காம விளையாட்டிற்கான முதல் பாரத ரத்னா விருது சச்சினுக்கு கொடுத்திருங்கப்பா!. (சச்சின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என நினைக்கிறேன்.) பின்னாடி பீல் பண்ணாதீங்க. வேற எந்த விளையாட்டிலும் உலகம் போற்றும் நபர் இந்தியாவில் இல்லை என்பதை மனசில வைச்சுக்கோங்க.



மீண்டும் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...