Showing posts with label 2ஜி ஸ்பெக்ட்ரம். Show all posts
Showing posts with label 2ஜி ஸ்பெக்ட்ரம். Show all posts

10 July, 2011

சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் ' 2ஜி ஸ்பெக்ட்ரம்'




2 ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் புதிதாக ஒரு
படம் இன்று முதல் கிளப்பியிருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றித்தான்
படம் என்றும் நீரா ராடியா கேரக்டரில் லட்சுமிராய் நடிப்பதாகவும், முக்கிய
வேடத்தில் நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தயாரிப்பு
தரப்பு தெரிவித்து உள்ளது.


ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது
இந்த படத்தை எடுப்பதில் எந்த அளவு சட்ட சிக்கல் இருக்கும் என்று தெரியவில்லை. ஆளும் தரப்பில் இருந்து நல்ல சப்போர்ட் கிடைக்கும் என்பது
மட்டும் உறுதி.


படத்தின் பப்ளிசிட்டிக்கு பஞ்சமிருக்காது. பார்க்கிற மாதிரி
எடுப்பார்களா பார்ப்போம். பட விளம்பரத்தில் பெயர் சொல்லும்படி ஒருத்தரும் தெரியவில்லை. எல்லாம் புதுமுகம் போல் தெரிகிறது.

என்ன மேட்டர்னா இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுமா?
சன் டிவியில் அவர்கள் படத்திற்கு செய்யும் விளம்பரத்தை இந்த தலைப்பில் கற்பனை செய்து பாருங்கள்.



' சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம்'

சும்மா அதிருதில்ல


மீண்டும் சந்திப்போம்.





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...