11 July, 2012

ஓய்வு பெற்ற Keeping Gloves


உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் முக்கியமானவரும், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் டீமின் முதுகெலும்பாக பல ஆண்டுகள் திகழ்ந்தவருமான  மார்க் பவுச்சர் வருத்ததுடனும், வலியுடனும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 


Mark Boucher

 
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி அங்குள்ள உள்ளூர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சக வீரர் இம்ரான் தாஹீர் சோமர்செட் அணியின் பேட்ஸ்மேன் ஜீமாலை போல்டாக்கிய போது ஸ்டெம்பில் இருந்த Bails கீப்பிங் செய்து கொண்டிருந்த பவுச்சரின் கண்ணை தாக்கியது. கருவிழியில் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் தவிர்க்க முடியாமல் தனது முடிவை அறிவித்துள்ளார். இனி Ab de Villiers கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கலாம்.


Mark Boucher injury

 
எந்த ஒரு கலையாக இருந்தாலும் மைல்கல் என்பது சந்தோசம் தரக்கூடியது தான். அனைத்து தர கிரிக்கெட்டையும் சேர்த்து 999 பேரை அவுட்டாக்கியுள்ள மார்க் பவுச்சர் இந்த இங்கிலாந்து தொடரில் 1000 வீரர்களை அவுட்டாக்கிய முதல் வீரர் என்ற மைல்கல்லை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் விதி விளையாடியதில் ஒரு எண்ணில் அந்த மைல்கல்லை தவறவிட்டு விட்டார். மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக 1997ல் இருந்து சுமார் 15 வருடங்கள் தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட்,ஒரு நாள், T20 என சகல விதமான ஆட்டங்களிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். அனைத்து வகையான ஆட்டங்களையும் சேர்த்து 10469 ரன்கள் அடித்துள்ள பவுச்சர் 999 பேரை கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் மூலம் அவுட்டாக்கியுள்ளார். மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வராவிட்டாலும் மிடில் ஆடரில் தனது வேலையை சரியாக செய்து வந்துள்ளார். 


Mark Boucher Records

 
35 வயதில் ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் கண்ணில் பட்ட காயம் விரைவில் குணமாகி வர இறைவனை வேண்டுகிறேன்.



விக்கெட் கீப்பர் தைபு

 zimbabwe keeper taibu


ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பரான தைபு தனது ஓய்வை அறிவுத்துள்ளார். இனி இறைவனுக்கு சேவை செய்யப்போவதாக அறிவித்து உள்ள 29 வயதான தைபு உலகின் மிக இளவயது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். சில காரணங்களுக்காக ஜிம்பாப்வே அணியை விட்டு விலகிய அவருக்கு கொலை மிரட்டல் வரவே தென் ஆப்பிரிக்காவிற்கு குடி பெயர்ந்தார். அந்த அணியில் சேர ஆசைப்பட்ட அவர் பிறகு மீண்டும் ஜிம்பாப்வே அணிகே திரும்பினார். தற்போது அவரும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.


மீண்டும் சந்திப்போம்.



6 comments:

  1. மிக அருமையான வீரர் பவுச்சர். பல மாட்சுகளில் கடைசி வரை ஆடி தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற செய்தவர்.

    அவரது கண் விரைவில் குனமடையட்டும்.

    தைபுவும் நல்ல வீரர், ஆனால் அணி நிர்வாகம் தான் சரியில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ தெரியவில்லை. ஜிம்பாப்வே,வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளின் கிரிக்கெட் போர்டு வீரர்களை விட அதிகம் விளையாடுகிறது.

      Delete
  2. மிக அருமையான இருவீரர்களை பற்றிய சிறப்பான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!

      Delete
  3. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

    சிரிக்காட்டி சுட்டுடுவாங்க

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...