நீங்க படிச்ச English மறந்து போகனுமா? கீழே இருக்கிறத
கொஞ்சம் படிங்க.
Purantucinnappillaikalcryingcrying Have you seen?.Can you doitnow Ifyou.YouAm I'slatestTVProgramme -in Treatmentwith fat peopleandbodyilaikka .......Whoweretalkingonthefield.
சின்னப்பிள்ளைகள் அழுது புரண்டு அழுவதை
பார்த்திருக்கிறீர்களா?. அது போல இப்ப செய்ய முடியுமா
உங்களால். சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா Programme -ல்
குண்டாக இருப்பவர்கள் மற்றும் உடல் இளைக்க Treatment
செய்பவர்கள் இரு பிரிவாக பேசிக்கொண்டே.......இருந்தார்கள்.
அலோபதி,ஹோமியாபதி,இயற்கை உணவு என ஆளாளுக்கு
ஒரு வழி சொல்ல கோயமுத்தூர் குசும்புடன் குபீரென்று ஒருத்தர்
கோதாவில் குதித்தார். தானே கண்டுபிடித்த முறை என்றும்
Hot and Short என்று பெயர் வைத்திருப்பதாகவும் சொல்லி அவர்
செய்ததை கீழே வீடியோவில் போட்டுள்ளேன். சிரிக்காம பாருங்க.
அதை போல் செய்தால் உடம்பு குறையுமோ என்னமோ தெரியாது.
ஆனா செய்யறதை பார்த்தாலே சிரிச்சு,சிரிச்சு இளைச்சுருவாங்க.
Finishing Touch ஆ ஒன்னு சொன்னாரு பாருங்க. அவருக்கு வயசு 61
ஆச்சாம். இந்த வயசுல இவ்வளவு Brisk-ஆ இருக்கிறது பெரிய
விஷயம் தான். முடிஞ்சா நல்ல குத்து பாட்டா ஒன்னு போட்டுட்டு
இதே மாதிரி செய்து பார்த்துட்டு Result சொல்லுங்க.
குழந்தைகள் சொல்லுக்கு என்று உலகில் தனி
மதிப்புண்டு. பொதுவாக யார் பேச்சையும் கேட்காத மனிதன் கூட
பிள்ளைகள் சொல்லும் போது கொஞ்சம் யோசிப்பான். அதை
நினைத்தோ என்னமோ கரூரில் ஒரு மினி பஸ் பின்புறம்
இந்த வாசகத்தை எழுதியிருந்தார்கள்.
'அப்பா குடிக்காம வாங்க'
ஒரு முடிவோட போற மனுசன யாராலும் மாத்த முடியாது.
ஆனா இங்கிட்டும் இல்லாம அங்கிட்டும் இல்லாம தள்ளாடிக்கிட்டு
(போதையில் இல்ல) இருக்கிற மனுசங்கள நிச்சயம் யோசிக்க
வைக்கும். இதை படிச்ச யாராவது ஒருத்தரு வண்டியை வீட்டுக்கு
திருப்பினாருன்னாலே இதை எழுதினவங்களுக்கு வெற்றி தான்.
தமிழக அரசு சுமார் 3900 கோடி அளவுக்கு புதிதாக வரிகளை போட்டிருக்கிறது. பட்ஜெட்டிற்கான டிரைலர் போலிருக்கிறது. தமிழகத்தில் திமுக மட்டும் மெல்ல முனங்கியிருக்கிறது. காச்மூச்னு கத்தியவரும் கப்சிப். இதற்கு
ஒரு படி மேலே திமுக கவுன்சிலர் தெரு சண்டையில் கைது
என தலைப்பு செய்தி வெளியிடும் நாளிதழ் கூடுதல் வரிகள் பற்றி
அரசு வெளியிட்ட செய்தியை அன்று வெளிடவேயில்லை.
உண்மையில் அரசுக்கு வேறு வழியில்லை.
எந்த அரசியல்வாதியும் அறிவிக்கும் இலவசங்களை வீட்டிலிருந்து
கொண்டு வந்து கொடுப்பதில்லை.அதற்கான நிதியை கடன்
வாங்குவது என்பது பெரிய முட்டாள்தனம்.கூடுதல் வரிகள்
ஒன்றே நிரந்தர தீர்வு.
பின்னாளில் ஏதாவது கணக்கு புலியோ,
குதிரையோ நாம் அதிகமாக கட்டும் வரித்தொகையை நமக்கு
கொடுக்கும் இலவச பொருட்களுடன் கணக்கிட்டு நாம் பெரும்
பொருட்களின் விலையை சொன்னால் இதற்கு இம்பூட்டு விலையா?
என மிரண்டு அடுத்து இலவசம் என்றாலே காதை மூடிக்கொண்டு
ஓடினால் போதும்.