31 October, 2011

கார் பார்க்கிங்

சில ஹைடெக் கார் பார்க்கிங்












சில ஹைகிளாஸ் கார் பார்க்கிங்











                                                           "என் வழி தனி வழி"




                      "நானும் எவ்வளவு நாள் தான் பொறுமையாவே  இருக்கிறது"





                                                       "சந்துல சிந்து பாடுவோம்ல!"





                        "தண்ணியடிச்சுட்டு நேரா வீட்டுக்கு தான் போகணும்"





                                 "கரெக்டா பார்க் பண்ணியிருக்கேனா என் வண்டிய!"



மீண்டும் சந்திப்போம்.



27 October, 2011

கங்குலியா யாரது?

                                                                இந்தியா-இங்கிலாந்து கடைசி ஒரு நாள்
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால் பிட்ச் ரிப்போர்ட் சொல்வதற்காக
ஈடன் கார்டன் மைதானத்திற்குள் நுழைய முயன்ற சவுரவ் கங்குலியை
ICC ஊழல் தடுப்பு அதிகாரி தடுத்து நிறுத்தி விட்டாராம்

                                                                 எவனா இருந்தா எனக்கென்ன? ID Card இருந்தா
தான் உள்ளே விடுவேன் அப்படின்னு சொல்லியிருந்தா கூட ஏதோ கேப்டன்
படம் பார்த்த Feeling ல் புல்லரித்து போயிருக்கலாம். ஆனா கங்குலியை பார்த்து
நீங்க யாருன்னே தெரியல!  அப்படின்னுட்டாராம். பிறகு கங்குலி ரூமுக்கு போய் அடையாள அட்டையை கொண்டு வந்து காட்டிய பிறகே திருப்தி அடைந்து உள்ளே விட்டாராம்.





                                                                 வங்கப்புலி, லோக்கல் ஹீரோ என ஏகப்பட்ட
பில்டப்புடன் (ஈடன் கார்டனில்)  உள்ள கங்குலிக்கே இந்த நிலைமை. தடுத்த
ஐ.சி.சி அதிகாரியின் பெயரை (தர்மேந்திர சிங் யாதவ்) பார்த்தால் இந்தியரை
போல் தான் தெரிகிறது. இவர்கள் தான் கிரிக்கெட்டில் ஊழலை தடுக்க போகிறார்களாம். விளையாடும்,விளையாடிய வீரர்கள் யார்? அவர்களை பார்க்க  வரும் வி.ஐ.பி க்கள் யார், பேரம் பேச வரும் புரோக்கர்கள் யார் என்று
எப்படி கண்டு பிடிப்பார்கள். பார்த்து, தோனியை ஒரு நாள் வெளியே நிறுத்தி
விடப்பொகிறார்கள். அப்புறம் டாஸ் போட வேற ஆள் தேட வேண்டி இருக்கும்.
 
                                  ஆனால் மேட்ச் பிக்ஸிங் நபர்களை மட்டும் 
                                     கரெக்டாக உள்ளே விட்டு விடுவார்கள். 


மீண்டும் சந்திப்போம்.



26 October, 2011

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

                                                       
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



































மீண்டும் சந்திப்போம்.



25 October, 2011

தீபாவளி - சில எச்சரிக்கைகள்

                                                                 தீபாவளி என்றாலே கொண்டாட்டம்
தான் (குழந்தைகளுக்கு) . அந்த சந்தோசம் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.
அத்துடன் நினைவில் நிறுத்திக்கொள்ள சில விஷயங்கள்.




முதலில்

முன் எச்சரிக்கை:

1) வெடிகளை முடிந்த வரை திறந்த வெளியில் வெடியுங்கள்

2) பத்தியை கடைசி வரை ஊதி,ஊதி வெடியை பற்ற வைக்க வேண்டாம்.
     (பத்தி இப்பொழுதெல்லாம் பையன் சைஸுக்கு கிடைக்கிறது.)

3) ஊதுபத்தி அருகில் உள்ள நபர்கள் மீதோ, ஓரமாய் எடுத்து வைத்து
     இருக்கும் வெடிகள் மீதோ படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

4) புது மாதிரியான வெடிகளாய் இருந்தால் முதலில் பெரியவர்கள்
    உபயோகித்து பார்ப்பது நலம்.

5) விலங்குகள் (நாய்,மாடு) போன்றவற்றின் அருகில் வெடிக்காதீர்கள்.
    அவைகளுக்கும் தொந்தரவு, உங்களுக்கும் தீங்காக முடியலாம்.

6) சிறு குழந்தைகளாக இருந்தால் ஒருவர் பின் ஒருவராக வெடித்தால்
    பாதுகாப்பாக இருக்கும், ரொம்ப நேரம் வெடித்தது போலவும் இருக்கும்,

7) கண்ணில் வெடி பிசிறு பட்டு விட்டால் குழாயை திறந்து தண்ணீர் சிறிது
     நேரம் கண்ணில் படும் படி செய்து பிறகு மருத்துவரிடம் அழைத்து
     செல்லுங்கள்

8) ஒரு தண்ணீர் நிரப்பிய வாளியை  அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

9) மிகவும் லூசான ஆடைகள் மற்றும் சுடிதார் சால் போன்ற ஆடைகளில்
    கவனம் தேவை.

10) தீப்புண் மருந்து கைவசம் வைத்திருங்கள்.


இப்பொழுது

பின் எச்சரிக்கை

1) அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. எனவே தீபாவளி ஸ்வீட்களில்
     கவனம் தேவை.

2) சில்வர் பாயில்ஸ் உள்ள ஸ்வீட்ஸ் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.

3) உணவோ, பலகாரமோ அதிகம் சாப்பிட்டது போல் இருந்தால் உட்கார்ந்து 
    சிங்கம், பாஸ் போன்ற படங்களை இடைவிடாமல் பார்த்துக் கொண்டு
    இருக்காமல் காலாற கொஞ்சம் நடந்து விட்டு வாருங்கள்.





சந்தோசமா தீபாவளி கொண்டாடுங்கள்


மீண்டும் சந்திப்போம்.


21 October, 2011

ரிங் டோன்கள் Calling

                                                                               IPL நடந்த போது அடிக்கடி காட்டிய
விளம்பரங்களில் Projector Type Phone ம் ஒன்று. அந்த நேரத்தில் ஒரு நண்பருடன்
பஜார் பக்கம் போயிருந்த போது ஒரு கடையில் China model Projector type phone ஒன்று விற்பனைக்கு இருந்தது. தரம் பற்றி கேட்ட போது 'வித்தவரு பக்கத்தில தான நிக்கிறாரு, அவரு கிட்டேயே கேட்டுக்குங்க!' என்றார் கடைக்காரர். நண்பரிடம் எப்பங்க வாங்கினீங்க! ஏன் அதுக்குள்ள வித்துட்டீங்க என்று கேட்டதுக்கு. அத விடுங்க, அந்த மாடல் ஒன்னும் சரியில்ல என்று எப்பவும் சொல்லும் பதிலையே சொன்னார். வாரம் ஒரு மாடல் செல்போன் வைத்திருப்பவர்களை பார்த்தால்  ஆச்சர்யமாக தான் இருக்கு. புது மாடல் செல்போன் வாங்கி அடுத்த வாரமே மட்டமான விலைக்கு விற்பவர்களை பார்த்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.




                                                                நான் ரொம்ப நாளா நோக்கியா 3310 மாடல்
போன் தான் வைத்திருந்தேன். நெட்வொர்க்கும், பேட்டரியும் ரொம்ப திருப்தி
ஆக இருந்தது. ஆனால் கால் வரும் போது கேட்ட ரிங்டோனை கேட்டு அருகில்
இருந்தவர்கள் கொலைவெறியோடு பார்த்ததாலும், பேருந்து பயணத்தில் பெரும்பாலான நேரங்களை செலவழிக்க வேண்டி இருந்ததால் பாடல்களை
கேட்பதற்காகவும் கேமரா மற்றும் மெமரி கார்டுடன் கூடிய செல்போனுக்கு
மாறினேன்.

                                                             முதன்முதலில் ஆசைஆசையாய் வைத்த
ரிங்டோன் தும்பி வா மலையாள பாடல். ரொம்ப நாளுக்கு அது தான்
வைத்திருந்தேன். பிறகு அவ்வப்போது ரிங்டோன் மாற்றிக்கொண்டே
வந்திருக்கிறேன். குறிப்பாக
சங்கீத மேகம் ,
பொத்தி வைச்ச ,
முத்துமணி,
ராதா,
ஒரு சிரி கண்டால் ,
ஹல்கே சே போலே 
போன்ற பாடல்கள் நிறைய இருந்தாலும் இளையராஜா தவிர்த்து
சாமுராய் ,
எனக்கென ,
செவ்வந்தி,
வேறென்ன ,
மற்றும் தவிர்க்க முடியாத
பச்சைக்கிளி முத்துச்சரம் பிட்
இப்போது
முன்னம் செய்த
மற்றும்
இவளொரு இளங்குருவி
பாடலும் ரிங்டோனாக உள்ளது. புது பாடல்களின் ரிங்டோன் வைப்பதில் உள்ள
பிரச்சனை பொது இடங்களில் அடிக்கடி கேட்க முடிவதால் நம் போனையும்
அவ்வப்போது கால் வந்திருக்கிறதா? என பார்க்க வேண்டியுள்ளது.

                                                              பாடல்களை கவிதை என்றால் ரிங்டோன்களை
ஹைகூ என்று தான் சொல்லவேண்டும். அதனால் இது தான் சிறந்த பாடல்கள்
என்றோ, சிறந்த ரிங்டோன் என்றோ எதுவும் சொல்லவில்லை. எனக்கு பிடித்து
இருந்தது, அவ்வளவு தான். இளையராஜா அடித்த பாடல்களின் BGM  மட்டும்
எடுத்தாலே ரிங்டோன்கள் ஏராளமாய் கொட்டும். ரிங்டோன்களுக்கு என்றே
அளவு எடுத்தது போல் சில பாடல்களின் குறிப்பிட்ட பகுதிகள் அமைகிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் பல பாடல்கள்  (உன்னாலே,உன்னாலே படம் வந்த
புதுதில் ஜூன் போனால் ஆரம்ப இசை பிட் கேட்காமல் வீட்டிற்கு வர முடியாது.
அந்தளவுக்கு பல பேரின் ரிங்டோனாக இருந்தது) , A.R.ரகுமான் (புது வெள்ளை
மழை),யுவன், அவ்வப்போது வரும் ஹிட் சாங்ஸ் என பட்டியல் நீளும். இதில்
நான் உபயோகித்த ரிங்டோன்ஸ்  பற்றி மட்டுமே கூறியுள்ளேன். அவ்வளவே!


மீண்டும் சந்திப்போம்.



20 October, 2011

மனதை 3Dய படங்கள்

சில 3D படங்கள்

பார்த்து ரசிக்க!





















மீண்டும் சந்திப்போம்.



18 October, 2011

கரெக்டா சொல்லியிருக்காரு கேப்டன்

                                                                       முதல் கட்ட தேர்தல் முடிந்ததும்
முதல் கட்டமாக அதிமுகவை எதிர்த்து திருவாய் மலர்ந்திருக்கிறார்
விஜயகாந்த். திமுக வை போல் அதிமுகவும் தேர்தல் அராஜகம்
செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இனி தினமும் அறிக்கை எதிர்
பார்க்கலாம் என நினைக்கிறேன்.




                                                       ஆனால் நான் சொல்ல போகும் மேட்டர்
வேற. அப்போது பேசிய விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலே தேவை
இல்லை என கூறியுள்ளார். ஆளும் கட்சியிடமே அந்த பொறுப்பை
ஒப்படைத்து விடலாம் என்பது போல் பேசியுள்ளார். உண்மை தானே!
உள்ளாட்சி அமைப்பை கொண்டு வந்ததே நிர்வாக வசதிகளுக்கும்,
நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் அரசின் திட்டம் போய் சேர வேண்டும்
என்று தானே!.ஆனால் வார்டு மெம்பர் சுயேட்சை, கவுன்சிலர் திமுக,
மேயர் அதிமுக என்று இருந்தால் எப்படி வேலை நடக்கும். முன்பு கூட
வெளியில் அடித்து கொண்டாலும் ஊழல் போன்ற விஷயங்களில் ஒன்று
சேர்ந்து கொள்வார்கள். இப்போது எல்லாம் சரிக்கு சரி நகம் போட்டு
கொள்கிறார்கள். இந்த அழகில் நிர்வாகத்தை  எங்க ஒழுங்காக நடத்தறது.

                                                                              ஆனா விஜயகாந்த் சொன்னதுக்கு
காரணம் இதெல்லாம் இருக்காது.
                          1) சும்மா, சும்மா செலவு செய்யனுமே!
                          2) தனி ஆளா மறுபடியும் ஊர்,ஊரா சுத்தனுமே!
                                               முக்கியமா
                          3) 41 வேட்பாளர் பேரை ஞாபகம் செய்யறதுக்கே நாக்கு
                               தள்ளி போச்சு, இதுல இத்தனை வேட்பாளர் பேரை எப்படி
                              ஞாபகம் வைத்து கொள்வது என்பது போன்ற காரணமாக
                               கூட இருக்கலாம்.




மீண்டும் சந்திப்போம்.

                                                      

16 October, 2011

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்



                                                                ஒவ்வொரு தடவை தேர்தல் வரும் போது
எல்லாம் இந்த சந்தேகமும் எனக்கு வந்துகிட்டே இருக்கு. ஓட்டு
போடுவதற்கு ஒரு நாள் முன்னாடி பிரசாரத்தை நிப்பாட்டனும்னு  சட்டம் போட்டு விடுகிறார்கள் ஆனால் அதற்கு அப்புறமும் எல்லா சானல்களிலும் நியூஸ் காட்டுகிறேன் பேர்வழி என்று பிரசாரம் செய்ததை காட்டி கொண்டே இருக்கிறார்கள்.  இது எந்த கணக்கில் வரும் என்று தெரியவில்லை. ஒரு வேளை டி.வி.,பேப்பர் எல்லாம் மீடியா கிடையாது என்று தேர்தல் கமிஷன் நினைக்கிறதோ என்னமோ?  

                          யாராச்சும் விளக்குங்களேன்.



                                             ஓட்டு போட போகனும் விடுங்கப்பா !



                                                          இதே கணக்கு தான் டாஸ்மாக் கடைகளுக்கும்.
ஒட்டுப்பதிவின் போது எல்லா ஒயின்ஸாப்பிற்கும் லீவு விட்டு விடுகிறார்கள். மற்ற நாட்களில் எப்படி வேண்டுமானால் குடித்து சாவுங்கள்,  ஓட்டு போடும் நாளில் மட்டும் தெளிவாக இருங்கள் என்று சொல்கிறார்களா? இல்லை நம் மக்கள் மட்டையாகி ஓட்டு போட யாரும் வரமாட்டார்கள் என்று கடையை மூடி விடுகிறார்களா?

            யாராச்சும் விளக்குங்களேன்.

 
 இது ஆப்படிக்க !




இது ஆப் அடிக்க !!



டிஸ்கி:

                  தேர்தல் நடைமுறை அறிவித்த பின்னர் எந்த ஒரு சலுகையோ,
திட்டமோ அறிவிக்கக்கூடாது என்று சொல்வாங்க. ஆனால் முதல்வர்
போனஸ் அறிவிச்சிருக்காங்களே. அது எப்படினு விளக்கமெல்லாம்
கேட்க மாட்டேன். கேட்டாலும் வாயா திறக்கப் போறீங்க!



மீண்டும் சந்திப்போம்.

13 October, 2011

இந்தியாவை ஒன்று சேருங்கள்

                                                                        Unity in Diversity என்றும் மொழியால்
வேறுபட்டிருந்தாலும் நாம் எல்லோரும் இந்தியர் என்றும் காலம்
காலமாய் படித்து வந்திருந்தாலும், நம்முடைய  அக்கம் பக்க உறவுகள்
எப்படி என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.



                                                                   
                                                                              ஆனால் இது அவ்வளவு சீரியஸான
மேட்டர் கிடையாது. பள்ளிச்சிறுவர்க்ளுக்கு உப்யோகமான இந்திய வரைபடம்
சேர்க்கும் விளையாட்டு. நீங்களும் விளையாடி பாருங்கள். நாம் விரும்பும்
இந்தியாவை நாம் எந்த அளவுக்கு அறிந்திருக்கிறோம் என்று அறிந்து
கொள்ளலாம்.





மீண்டும் சந்திப்போம்.


11 October, 2011

நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்


                
       அரசியல்வாதிகளும், நாமும் காலம் காலமாக மாறாமல் இருக்கிறோம் என்பதற்கு மிக அழகான சான்று இந்த கட்டுரை. ஆரம்ப கால திராவிட இயக்கங்களுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த கவிஞர் கண்ணதாசன் எண்ணங்கள் 1000 நூலில்  எழுதியது.




   
               நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொது மக்களே!
                       
               நாங்கள் உங்களை வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது
போல் எங்களுக்கு நீங்கள் பதவி கொடுப்பதால்!
           
               உங்களை நாங்கள் மதிக்கிறோம். உங்களை வாழ வைக்க வந்த
எங்களை வாழ வைக்கிறீர்கள் என்பதால்!

                நாங்கள் அரசியல்வாதிகள்.

                நாங்கள் அன்று எப்படி இருந்தோம்; இன்று எப்படி இருக்கிறோம்
என்று நீங்கள் ஆராயக்கூடாது.
           
                அன்று பட்டுக்கோட்டைக்கும் தஞ்சாவூருக்கும் போய்க் கொண்டு இருந்தோம்; இன்று பாரிசுக்கும்,நியூயார்க்கும் போய்க் கொண்டு இருக்கிறோம்.

                 இந்த முன்னேற்றத்தை நீங்கள் விஞ்ஞான ரீதியாகக் கணக்கிட வேண்டுமே தவிர, வேறு காரணங்களை ஆராயக்கூடாது.

                  நாங்கள் சிரிப்பதே உண்மையான சிரிப்பென்றும், அழுவதே
உண்மையான அழுகை என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்.
                            
                    நன்றி!

                   அந்த நம்பிக்கை மேலும் தொடர வேண்டுமே தவிர இடையில்
தளரக்கூடாது.

                     நாங்கள் மேடையில் பேசும்போது நீங்கள் ஆரவாரம் செய்கிறீர்கள்;  உண்மையில் நீங்கள் ஆரவாரம் செய்வீரகள் என்று நம்பித் தான் நாங்கள் பேசுகிறோம்; உங்களுடைய புத்திக்கூர்மையில் எங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.

                      நாங்கள் சில நேரங்களில் உண்மையும் பேசுவதுண்டு.                 எப்பொழுது உண்மை பேசுகிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும் !

                      எதிர்க்க முடியாத சூழ்நிலையில் தப்பித்தவறி பேசுகிற அந்த உண்மையைப் போலத்தான் நாங்கள் பேசும் எல்லாப் பேச்சுக்களும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும்.
             
                        நாங்கள் மேலே போட்டிருக்கும் துண்டின் நீளத்தை விட,
எங்கள் நாக்கின் நீளம் அதிகம்.
             
                       அந்த துண்டு வெள்ளை வெள்ளேரென்றிருக்கிறது. அந்த துண்டின் வெண்மையைப் போல் எங்கள் உள்ளமும் இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது நியாயமே.

                        அப்படித்தான் இருக்கிறது என்று நம்பிவிடுவது மிகவும் நல்லதல்லவா!

                         எங்களை நீங்கள் எந்த நேரமும் கைவிட்டு விடக்கூடாது.

                        எங்களுக்கு வேறு தொழில் தெரியாததால் தான் இந்த தொழிலுக்கு வந்தோம். 

                        நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தை எங்களால் ஒழிக்க முடிகிறதோ இல்லையோ, எங்களுடைய வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டது.

                          நாங்கள் ஜனநாயகத்தால் நியமிக்கப்பட்ட சாதாரண ஊழியர்கள்.

                         ‘மக்கள் சேவையே மகேசன் சேவை, மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
                                
                        நாங்கள் அழகான புதிய கார்களில் செல்லும் போது அவற்றை எங்களுடைய கார்களாக நீங்கள் எண்ணக்கூடாது.

                         நாங்கள் ஏழைகள்; கார் வாங்கக்கூடிய சக்தி எங்களுக்கு ஏது?
                           
                        அவை எங்கள் மனைவிமார்களின் கார்கள்!
                      
                         அவர்களுக்கு எப்படி வந்ததென்று நீங்கள் கேட்கக்கூடாது.
                 
                        குடும்பக்கணக்கு ரகசியங்களை ஆராய்வது, அரசியலுக்கு அழகல்ல!

                         சென்ற தலைமுறையில் நாங்கள் செய்த புண்ணியம், இந்த
 தலைமுறையில் எங்களை தலைவர்களாக்கியிருக்கிறது.

                           நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை மிகவும் பரவலானது.
                                     
                          ஒரு அரசியல்வாதிக்கோ, அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று அது கட்டாயப்படுத்தவில்லை.
                      
                           இந்த வகையில் நாங்கள் ஜவகர்லால் நேருவுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
                
                          ‘அப்படி இருந்தவனா இப்படி இருக்கிறான்’ என்று நீங்கள் ஆச்சரிய்ப்படக்கூடாது.
                   
                           நதிமூலம்,ரிஷிமூலம்,அரசியல்வாதிமூலம் மூண்றும் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவை!
                     
                           பதவிக்கு தகுதி எப்படி நிர்ணயமில்லையோ,அப்படியே பணம்
செர்வதற்கும் தகுதி நிர்ணயமில்லை.
          
                          ஆகவே, எங்களுக்கு பதவியும் வருகிறது; பணமும் வருகிறது.
                                
                           அந்தப் பணத்தையும் நாங்கள் பொது மக்களுக்குக்காகவே
சேர்க்கிறோமேயல்லாமல், எங்களுக்காக அல்ல!
                 
                            உங்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்குவதற்காக நாங்கள் சில ரேட்டுகளை நிர்ணயித்திருக்கிறோம்.
      
                              உங்களது மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக, மாதம் ஒரு
சர்க்கஸ் நடத்துகிறோம்.

                              உங்களை ‘சோஷலிஸ’ சொர்க்கத்துக்குக் கொண்டு
செல்வதற்காக யார் சோஷலிஸம் பேசினாலும் கூடச் சேர்ந்து ‘கோரஸ்’ பாடுகிறோம்.

                               நாங்கள் உங்களையும், நீங்கள் எங்களையும் காப்பாற்றுவதற்காக உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார் எந்த விளக்கம் சொன்னாலும் நீங்கள் நம்பாதீர்கள். எங்களை நம்பிய பிறகு நீங்கள் மற்றவர்களை நம்புவதே மடத்தனம்.

                          ‘கடைசியாகப் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை’ என்று சொல்லிக் கொண்டே பணத்தை வசூல் செய்துவிட்டு, சண்டையைக் காட்டாமலேயே மூட்டை கட்டும் மந்திரவாதியைப் போல் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம்.

                            நாங்கள் ‘வரும் வரும்’ என்று சொல்கிற நல்வாழ்வு ஏதோவொரு நூற்றாண்டில், ஏதோ ஒரு தலைமுறையில் வரும்.
                         
                           அது வரும் போது எங்களால் தான் வந்தது என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்!
                      
                          ஊழல் ஊழல் என்று மற்றவர்கள் கூறுவார்கள்; நீங்கள் கவலைப் படக்கூடாது! எந்த நாட்டில் எந்த ஆண்டில் ஊழல் இல்லை?
                  
                          பதினேழாம் நூற்றாண்டில் இல்லையா? பதினெட்டாம் நூற்றாண்டில் இல்லையா? பத்தொண்பதாம் நூற்றாண்டில் இல்லையா?
                            
                           சீஸர் காலத்தில் இல்லையா? ஜார்ஜ் மன்னன் காலத்தில் இல்லையா? சர்ச்சில் காலத்தில் இல்லையா?
 
                            எங்களைக் கண்டால் மட்டுமே வயிறெரிகிற பாவிகள், பாரம்பரியமாக இருந்து வருகிற மரபைப் பற்றி எங்கள் மேல் குற்றம் சாட்டுகிறீர்கள்.
                              
                              ஏழை மக்களே! நம்பாதீர்கள்! இதயத்தில் கை வைத்துச் சொல்கிறோம்; நாங்கள் உங்கள் தொண்டர்கள்.
                            
                                நீங்கள் தலையால் இடும் வேலையைக் காலால் உதைக்க -
மன்னிக்க வேண்டும் -  நாக்குக் குழறி விட்டது! நீங்கள் காலாலிடும் வேலையைத் தலையால் உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
                                             
                                ஆகவே, எந்தத் தேர்தலிலும் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்,
                              
                               மறவாதீர்கள், எங்கள் நரிக்குட்டிச் சின்னத்தை மறவாதீர்கள்!
                  

                             நரிக்குட்டி, ஏழைகளின் பணப்பெட்டி!


                             வாழ்க நரிக்குட்டி! வாழ்க நாங்கள்!



                                                                                                                     இப்படிக்கு,
                                                                                                             ஜனநாயகம் மறவா
                                                                          
                                                                                                              அரசியல்வாதிகள்.




மீண்டும் சந்திப்போம்.

10 October, 2011

எப்போதோ படித்தது



படிக்காதவன்
ரயிலில் 
திருடுவான்.
படித்தவன்
ரயிலையே
திருடுவான்.




ஒரு நல்ல சொற்பொழிவுக்கு
நல்ல ஆரம்பம் இருக்க வேண்டும்
நல்ல முடிவு இருக்க வேண்டும்
இரண்டுக்கும் உள்ள இடைவெளி
குறைவாக இருக்க வேண்டும்




 ஒரு தவளைக்கு எது அழகாக
தோண்ற முடியும். துருத்திக்
கொண்டுள்ள கண்கள், அகன்ற
வாய், மஞ்சள் நிற தொப்பை,
புள்ளியுள்ள முதுகு இவற்றை
கொண்ட பெண் தவளை தானே!




தேவைகள் 
தான் புதிய 
கண்டுபிடிப்புகளுக்கு
தாய் என்றால் 
அப்பா 
என்ன செய்து 
கொண்டிருக்கிறார்?.





 இன்றைய பிரச்சனைகளுக்கு
நேற்றைய பதில்களை
சொல்வது தான்
அரசியல்


  
மனிதன் மதத்திற்காக சண்டை     
போடுவான்,அதைப்பற்றி 
எழுதுவான், பேசுவான்.
உயிரையும் விடுவான். 
ஆனால்
அதன்படி வாழ மாட்டான்.









வாய்ப்புகளில் உள்ள பிரச்சனைகளை
பார்ப்பவன் 
தோற்கிறான்.
பிரச்சனைகளில் உள்ள
வாய்ப்புகளை 
பார்ப்பவன்
ஜெயிக்கிறான்.











மீண்டும் சந்திப்போம்

08 October, 2011

தேர்தல் கமிஷனின் அதிமுக சின்னம்

                                                                        திருச்சி இடைத்தேர்தல் அக்.13ம் தேதியும்,
உள்ளாட்சி தேர்தல் அக்.17ம் தேதியும் நடைபெறுவதால் இடைத்தேர்தலில்
ஓட்டுப்போடும் போது இடது கை ஆள் காட்டி விரலிலும், உள்ளாட்சி தேர்தலில்
ஓட்டுப் போடும் போது  இடது கை ஆள் காட்டி விரலுக்கு அடுத்து உள்ள நடு
விரலிலும் அடையாள மை வைக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதுக்கு தேர்தல் கமிஷன் ஈஸியா இப்படி சொல்லி விடலாமே!


தமிழக மக்கள் ஓட்டுப் போடும் போது இடது கையில் உள்ள இந்த விரலில் 
மை வைக்கப்படும்








திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு மட்டும் இடது கையில் உள்ள 
இந்த இரண்டு விரலிலும் மை வைக்கப்படும்.




இந்த ஓட்டு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா!





அனுஷ்கா கூட இடைத்தேர்தல்ல இரட்டை இலைக்கு ஓட்டு
கேட்கிறாங்களோ?



மீண்டும் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...