22 December, 2011

உயிரை கொடுத்து போராடாதீர்கள்



                                 தமிழகத்தில் சமீபகாலமாக போராட்டங்கள் பல்வேறு ரூபங்களில் தொடந்து வந்து கொண்டே இருக்கிறது.ஆனால் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் சிலர் தீக்குளித்தோ, அல்லது வேறு முறையிலோ தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. உயிரின் மதிப்பு சாதாரண மனிதர்களை விட உயிரை துணிந்து போராட்டத்தில் இறங்குபவர்களுக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். 
  


                                              உயிரைக் கொடுத்து போராட வேண்டும் என்று சொல்வது போராட்டத்தின் இறுதி எல்லையை குறிப்பிட தானே தவிர எல்லை மீறுவதற்கு அல்ல!.  அந்த எல்லையையும் தாண்ட துணிந்தவர்கள்  உயிருடன் இருந்திருந்தால்  அந்த போராட்டத்தையும் வென்று , அடுத்த போராட்டத்திற்கும் தலைமை ஏற்றிருப்பார்கள். உயிரை விட மேலாக சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களே ! , நீங்கள் இந்த நாட்டிற்கு அஸ்திவாரம் போன்றவர்கள்.மக்கள் கவனத்தை போராட்டத்தின் பக்கம் திருப்பவோ, போராட்டத்தை வெல்லவோ பல வழிகள் இருக்கின்றன. மேலும் தற்கொலைகளால் எந்தப்போராட்டமும் வென்றதில்லை, இருந்து போராடியவர்கள் தான் வென்று தந்து இருக்கிறார்கள்.



                                                   தாங்கள் சார்ந்த கட்சிக்காக, அல்லது இயக்கத்திற்காக என்று நாம் பல தற்கொலைகளை பார்த்திருக்கிறோம். தற்கொலை எந்த காரணத்திறகாக இருந்தாலும் அது கோழைத்தனம் தான். போராட்டக்காரர்களுக்கு அது அழகல்ல. ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த தலைவனும் இது வரை தங்கள் போராட்டத்திற்காக தற்கொலை செய்து கொண்டதில்லை.   அப்படியானால் போராட்டத்திற்காக உயிரையே கொடுத்தவர்களின் உயிருக்கு மதிப்பில்லையா?. இருக்கிறது. நிறைய மதிப்பிருக்கிறது. அதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.



                                                   தற்கொலை செய்து கொண்டவர்களை தியாகி ஆக்கும் போது அது போல் நொறுங்கி கிடக்கும் மேலும் சில நெஞ்சங்களுக்குள் சிறு பொறியை ஊதி விடுகிறோம் என்று நினைவில் கொள்ளுங்கள்.  ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் நமது போராட்டம் வலுப்பெற்றது என்று சொல்லாமல் நமது போராட்டம் மிகப்பெரிய போராளியை இழந்து தவிக்கிறது என்று இருப்பவர்களுக்கு உணர செய்யுங்கள். தீக்குளித்த அப்பாவி இதயங்களின் சூட்டில் குளிர் காய வேண்டாம். எனவே நன்பர்களே இனி களம், காரணம் எதுவாக இருந்தாலும் 



                                                      இருந்து போராடுங்கள்
                                                      இறந்து போராடாதீர்கள்.




மீண்டும் சந்திப்போம்.

  

6 comments:

  1. http://shammeem.blogspot.com/சரியாக சொன்னீர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சாது என்ற படத்தை பாருங்கள்

    ReplyDelete
  2. @shameem
    அர்ஜூன் நடித்த படம் தானே!, பார்க்கவில்லை. இதே கருத்தை தான் சொல்லியிருந்தார்களா?

    ReplyDelete
  3. உண்மைதான் .. விளைமதிபிள்ளதது உயிர்

    ReplyDelete
  4. @"என் ராஜபாட்டை"- ராஜா
    //உண்மைதான் .. விளைமதிபிள்ளதது உயிர்//
    விலை மதிப்பில்லாதது தமிழும் கூட...
    ராஜா!,

    ReplyDelete
  5. @"என் ராஜபாட்டை"- ராஜா
    பார்த்தேன்., ஓட்டும் போட்டுட்டேன்.
    (ஹி...ஹி... கள்ள ஓட்டும்)

    ReplyDelete
  6. http://lion-muthucomics.blogspot.com/2011/12/editor-on-blogs.html#comment-form

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...